Friday, January 11, 2013

உடல் பருமன் சுட்டு எண்


உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.


உடலின் எடைக்கும்உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டுவிடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.

எடை (கிலோவில்)
சுட்டு எண் =
------------------------------ X 10000

(உயரம் செ.மீ. உயரம் செ.மீ.)



சுட்டு எண்
உடலமைப்பு
ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள்
<18.5
குறைவான எடை
நடுநிலை
18.5-24.9
ஆரோக்கியமான எடை
குறைவு
25-29.9
அதிக எடை
அதிகம்
30-34.9
மிகவும் அதிக எடை
மிகவும் அதிகம்
>35
மிக மிக அதிகப்படியான எடை
மிக மிக அதிகம்


உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது.








விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line


--==--

Please Contact for Appointment