Tuesday, March 26, 2013

சிரிப்பின் மருத்துவ பலன்கள்





சிரிப்பின் மருத்துவ பலன்கள்
Ø  பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு.
Ø  சில குறிப்பிட்ட சமயங்களில் இது தானாக எழுவதே தவிர, நாமாக யோசித்து வருவது அல்ல.
Ø  மூளையின் செயல்பாட்டால் உண்டாகக்கூடியதாக இருந்தாலும் உணர்வுகளால், நினைவுகளால் தூண்டப்படக்கூடியது. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, கை-கால்களின் தசைகளும் இயக்கப்படுகிறது.
Ø  குழந்தையிம் முதல் சிரிப்பு சுமார் மூனறை முதல் நான்கு மாத வாக்கில் ஆரம்பிக்கிறது. அழுகையைப் போலவே தாய் மற்றும் பிறரது கவனத்தை ஈர்க்க குழந்தை சிரிப்பையும் கையாளுகிறது.
Ø  பெரும்பாலான சிரிப்புகள் நகைச்சுவையால் வருவதாக நாம் நினைக்கிறோம். அப்படியல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், பேசும்போதும் இயல்பாக சிரிப்பு வருகிறது. இது சமூகப் பிணைப்பின் அடையாளம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
Ø  சிரிப்பினால் பேச்சு தடைபடுவதில்லை... அதே சமயம், ஒரு நிறுத்தற்குறி மாதிரி சிரிப்பு பயன்படுகிறது.
Ø  மனித சிரிப்பின் முன்னோடி நமது மூதாதையரான குரங்குகள் பல்லை விரித்துக்காட்டுமே.. அதுதான் என்கிறார்கள்.
Ø  எல்லா விலங்குகளுமே விளையாடும் போது வித்தியாசமான ஒலி எழுப்பத்தான் செய்கின்றன. அதாவது சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அந்தச் சிரிப்புகள் அனைத்தும் மனித சிரிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இதனால் அவற்றை சிரிப்பாக நாம் எடுத்துக் கொள்வதில்லை.
Ø  சிரிப்பு விளையாட்டோடு தொடர்புடையது.
Ø  நாம் சந்தோஷமான மனநிலையில் இருந்தால் தான் சிரிப்போம்... இல்லாவிட்டால் உம்மென்றுதான் இருப்போம்.
Ø  பெரியவர்களுக்கும் விளையாட்டுக்கும் இடையில் தூரம் அதிகம் என்பதால் தான், பெரியவர்களை விட சிறுவர்களே அதிகமாக சிரிக்கிறார்கள். இதுதான் உண்மை என்கின்றன ஆய்வுகள்.
Ø  சிரிப்பை பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், சிரிப்பைக் கூட பிரித்துப் பார்க்கலாம்.. யாரைப் பார்த்து சிரிக்கிறோம்.. யாருடன் சிரிக்கிறோம் என்பதிலிருந்து நமது சிரிப்பின் தன்மை தெரியவரும்.
Ø  அசட்டுச்சிரிப்பு என்பது  இக்கட்டான நிலையில் நாம் பிறரை தவிர்க்க முனைதல். நாமாக வலிய சிரிப்பது,
Ø  அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கு ஏளனச் சிரிப்பை பயன்படுத்துகிறோம். கர்வச்சிரிப்பு தன்னைத்தானே உயர்வாக நினைப்பதைக் குறிக்கிறது.
Ø  இதைபோல் இளநகை, குரு நகை, குரூர நகை என சிரிப்பை நாமாக வேறுபடுத்திக்கொள்ளலாம்.
Ø  இயல்பான சிரிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. தானாக வருவது, நகைச்சுவையால் வருவது, அதாவது உடல் ரீதியான சிரிப்பு, உளம் சார்ந்த சிரிப்பு.
Ø  நாம் எதையாவது நகைச்சுவையான ஒன்றைப் பார்த்தால் சிரிக்கிறோம். நமக்கு வித்தியாசமாகத் தெரிவதைப் பார்த்து சிரிக்கிறோம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வயதினருக்கு வித்தியாசமாக படும். சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தினமும் பதினேழு முறை சிரிக்கிறார்கள்.

மருத்துவ பலன்கள்
ü  வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். மனஇறுக்கத்திற்குக் காரணமான ஹார்மோனைக் கட்டுப்படுத்தி மனத்தை தளர்த்துகிறது. கடுமையான நோய்களையும் எளிமையாக மாற்றுவது சிரிப்பு.
ü  சிரிப்பதால் உதரவிதானம், நுரையீரல், வயிறு, கால்கள், முகம், முதுகு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் பலன் கிட்டுகிறது.
ü  நமது மன நலனை மேன்மையுறச் செய்கிறது.
ü  பயம், கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்களை மாற்றுகிறது.
ü  சிரித்தே நோயைப் போக்கலாம் என்பதற்காக பல நகரங்களில் சிரிப்போர் குழு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
ü  சிரிக்கத் தெரியாதவனை மிருகம் என இகழும்
ü  உலகம் சிரிக்கத் தெரிந்தவன், வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவன் எனப் போற்றுகிறது.




76 6720 9080

விவேகானந்தா கிளினிக்  ஹெல்த் லைன்

Please Contact for Appointment