Thursday, March 7, 2013

ஆண்களின் மார்பகம் பெருத்தல் - காரணம் & சிகிச்சை









ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன்.
டெஸ்டோஸ்டிரான் என்பது ஆண்மைக்கான ஹார்மோன்.

ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும்.

வளரிளம் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாக சுரக்கும், இது இயல்பான விஷயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே பெரிதாகும், காம்புகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும்.அதனால் டீன் ஏஜ் பருவத்தில் ஆண்களின் மார்பகம் பெரிதானால் கவலைப்பட ஒன்றுமில்லை.

Ø  ஆண்களுக்கு மார்பகம் பெரிதாக இருந்தாலோ, அல்லது இருபது வயதிற்க்கு மேல் மார்பகம் பெரிதானாலோ, இதற்கு வேறு காரணங்கள் உண்டு. அவை:
Ø  டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நிரந்தரமாகி விடுவது.
Ø  உடல் பருமன். குண்டாக இருந்தால், கொழுப்பு சத்து மார்புக்கு அருகே தங்கி விடுகிறது. ஹார்மோன் பிரச்சனை இல்லா விட்டாலும், கொழுப்பு மட்டுமே சேர்ந்து மார்பகம் போல காட்சியளிக்கும்.
Ø  குடிப்பழக்கம்.
Ø  போதை மருந்து-கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை உட்கொள்வது.
Ø  வேறு நோய்களுக்காக டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகள்.
v  ரத்தக் கொதிப்பு, மன நோய், அஜீரணம் போன்றவைக்காக கொடுக்கப்படும் மருந்துகள்.
v  தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக்காக நீங்களாகவே உட்கொள்ளும் மருந்துகள்.
v  உடல் தசை வளர்வதற்காக (பாடி பில்டிங்) நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், அல்லது ஊசிகள்.
Ø  கல்லீரல் நோய் (Cirrhosis)
Ø  சிறுநீரகக் கோளாறு.
Ø  தைராய்ட் சுரப்பிக் கோளாறு
Ø  விரைப்பை அல்லது பிராஸ்டேட் (Prostate) புற்று நோய்.
Ø  வயதாவதால் ஆண்மைச் சுரப்பி குறைந்து போதல்.
Ø  ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. அதுவும் மார்பக வளர்ச்சி போலவே இருக்கும்.

ஆண்களுக்கு மார்பகம் பெருப்பதால் வரும் பிரச்சனைகள்:
ü  மார்பில் அல்லது காம்பில் வலி, அல்லது திரவம் வெளியாதல்.
ü  மற்றவர்கள் செய்யும் கிண்டல், கேலி போன்றவற்றால் மன உளைச்சல்.
ü  இந்தப் பிரச்சனையினால், பெண்களை அணுகுவதில் பயம் ஏற்படுதல்.

மருத்துவரை ஆலோசியுங்கள்:
Ø  எது, எப்படியாக இருந்தாலும், வெட்கப்படாமல் மருத்துவரிடம் காட்டி செக்கப் செய்து கொள்ளுங்கள்.
Ø  இது டீன் ஏஜ் பருவத்தில் ஏற்பட்டால், மருத்துவர்கள் ஒரு 2-3 வருடங்கள் கழித்து, திரும்ப வரச் சொல்வார்கள். இது அதற்கு மேலும் தொடர்ந்து இருந்தாலோ, அல்லது வலி மற்றும் சீழ் வெளியானாலோ உடனே மருத்துவரிடம் திரும்பச் செல்லுங்கள்
Ø  நீங்கள் சாப்பிடும் மருந்துகளை ஆராய்ந்து பாருங்கள்.
Ø  நீங்கள் நடுத்தர வதில் இருந்தால், உங்களுக்கு வேறு ஏதும் நோய் இருக்கிறதா என்று செக்கப் செய்துகொள்ளுங்கள். மற்ற நோய்களும், உங்கள் மார்பகம் வளரக் காரணமாக இருக்கலாம்.
Ø  குடி, மற்றும் போதைப் பழக்கம் இருந்தால், அவற்றைக் கை விடவும்.

சிகிச்சை முறைகள்:
1. டீன் ஏஜ் பருவத்தில் நடந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மன ரீதியாக ஆறுதல் கூறினாலே போதுமானது.
2. ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரப்பதை தடுக்க சிகிச்சை எடுக்கவேண்டும்.
4. மன ரீதியான ஆறுதலையும், அரவணைப்பையும் குடும்பத்தினரும், நண்பர்களும் கொடுக்க வேண்டும்.
5- தேவைப்படின் மருந்துகளுடன் கவுன்சிலிங் நல்ல பலனளிக்கும்.





விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்

Please Contact for Appointment