Saturday, July 20, 2013

முத்தமிட்டால் எய்ட்ஸ் வருமா? ஹெச்.ஐ.வி சந்தேகங்கள்.
HIV நோய் தொற்றுள்ளவரின், கிருமி கலந்திருக்கும் உடற்திரவங்களான விந்து, பெண்ணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன்  தொடர்பு இருந்தால் நோய்தொற்று ஏற்படலாம்.
Ø  அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண்டும். வெட்டுக்காயம், புண், தோல் அரிப்பு, உராய்வதால் ஏற்படும்  காயங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.
Ø  நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிடமிருந்து மற்றவருக்கு கிருமி தொற்ற வேண்டும்.
Ø  மனித உடலுக்கு வெளியே HIV கிருமியால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் தொற்ற வேண்டும்.
Ø  புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் H1N1 வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, நாற்காலி, கதவுக் கைபிடி போன்றவற்றில் கூட நீண்டநேரம் உயிர் பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும்.
Ø  ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே  நீண்ட நேரம் வாழாது

HIV கிருமி தொற்றும் முக்கிய வழிகள்.
v  நோய் தொற்றுடையவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்
v  நோய் தொற்றுடையவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர்களிடையே பரவ காரணமாகிறது.
v  தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத்திலும், பின் பாலூட்டுவதாலும்.
v  இரத்தம் ஏற்றுவது முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே ஏற்றப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.
v  மற்ற உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.
v  இதனால் இவற்றின் வழியாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.

எச்சிலால் தொற்றாது என்பதை விவாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும்?. எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது.

வேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந்தாலும் அது இரத்தப் பரிசோதனையில் தெரிய 2 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம். சிலருக்கு 3 மாதங்களுக்கு மேலும் ஆகலாம்.

இருந்தபோதும், பலரும் அஞ்சுவது போல
ü  தொட்டுப் பேசுவதாலோ,
ü  அருகில் இருப்பதாலோ,
ü  உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதாலோ HIV தொற்றுவதில்லை.
ü  காற்றினாலும், நீரினாலும், தொற்றுவதில்லை.
ü  கொசு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.

முத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற கேள்விக்கு பதில்

ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.

காதலிக்கு, மற்ற பெண்களுக்கு. ஆசைப்பட்டவருக்கு, விரும்பியவருக்கு சந்தோசமாக வாயில் முத்தம் கொடுங்கள். கொடுத்துக் கொண்டேயிருங்கள்.
அதிர்ஷ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.

இல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண்டியிருக்கும்.

குறிப்பு: மேற்கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும் தோன்றுபவை. இவற்றை வைத்து ஒருவருக்கு எச்..வி தொற்றியிருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்

==--==

Please Contact for Appointment