Friday, September 6, 2013

உடலுறவில் ஈடுபட பொருத்தமான வயது எது? Right age to start Sex










கேள்வி:
எனக்கு வயது 16, எனக்கு சில சந்தேகங்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் என்றும் எத்தனை வயதுவரை நாம் உறவில் ஈடுபட முடியும் தயவு செய்து விளக்கினால் என் சந்தேகம் தீரும். - What is the right age to start sexual intercourse? and how long i continue my sexual activities?

பதில்:
எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுவதற்கும் தயாராகத் தொடங்குகிறது.

எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் அளவிலும் மன அளவிலும் உறவில்  ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.

ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பெரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம்.

அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஆகவே திருமணமாகியிருந்தாலும் கூட 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.

ஆனாலும் இளவயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படலாம்.


ஆகவே தேவையான குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப்பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக  அவசியமாகும்.











மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்













==--=

Please Contact for Appointment