Thursday, December 18, 2014

CHENOPODIUM ANTHELMINTICUM – செனோபோடியம் அன்தெல்மின்டிகம்



 CHENOPODIUM  ANTHELMINTICUM  – செனோபோடியம் அன்தெல்மின்டிகம்










CHENOPODIUM  ANTHELMINTICUM  – செனோபோடியம் அன்தெல்மின்டிகம்


சூதக எலும்பில் வலி ஏற்படுதல், மூளையில் உள்ள மென்மையான நரம்புகள் வெடித்து மயங்கி விழுந்து விடுதல், வலது புற மூளை அமைப்பில் உள்ள நுரையீரலின் மென்மையான நரம்புகளில் தடை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு, ஆழ்ந்து சுவாசிப்பார்கள். தீடீர் என மயங்கி விழுந்து விடுவார். ஆபத்து கால மருந்துகளில் இதுவும் ஒன்று. மூளைக்கு மேல் உள்ள சவ்வில் ஏற்படும் தொல்லைகளுக்கும் (மூளைக்காய்ச்சல்) இதுவே மருந்து. செவி நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு (NAT- SALICYL.) செனபோடியம் எண்ணெய் குடித்த, உபயோகப்படுத்திய பிறகு வரும் தொல்லைகளுக்கு இது, இவர்களுக்கு கொக்கி புழு மற்றும் நாடா புழு தொல்லைகளும் இருக்கும். காது:- மந்தமாகி அடைப்பு ஏற்படும். காது நன்றாக கேட்கும். கனமான சத்தமும் கேட்கும். தன் காது சத்தத்தை பிறரோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். பிறர் பேசும் போது கனமாக பேசுங்க என்று இவர்கள் சொல்லுவார்கள். வண்டு கத்துகிற மாதிரி சத்தம் கேட்கிறது. குரல் மங்கி போச்சி, எனக்கு சரியாக குரல் பேச வரவில்லை. டான்சில் வீங்கி போச்சி, இந்த காது, தொண்டை தொல்லையினால் மயங்கி போய்விடுவார். முதுகு:- சட்டத்தில் ஊசியில் குத்துகிற மாதிரி இருக்கும். வலது புற தோள்பட்டையில் அகலமாக வலி பரவி தண்டுகுள்ளே போய் அப்படியே நெஞ்சுக்குள்ளே வலி வந்து இறங்கி விடும். சிறுநீர்:- மஞ்சள் நிறத்தில் நிறைய போகும் சிறுநீரைப் பிடித்து பார்த்தால் நுரையாட்டம் மேலே இருக்கும். சிறுநீர் கழிந்த பிறகு பாதையில் எரிச்சல். சிறுநீரை பிடித்துப் பார்த்தால் (பாட்டிலில்) அடியில் படிவம் மஞ்சள் நிறமாக காணப்படும். உறவு:- ஒப்பிட்டு பார்க்க வேண்டிய மருந்து OP, CHIN, CHEL. புழு, மஞ்சள், மயக்கம் இது தான் முக்கியம்.



 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------








Please Contact for Appointment