Friday, December 19, 2014

CHININUM ARSENICUM - சினினம் ஆர்சனிகம்



 CHININUM ARSENICUM - சினினம் ஆர்சனிகம்













CHININUM ARSENICOSUM - சினினம் ஆர்சனிகோசம்


இவர்கள் மரணக்களைப்பில் படுத்து இருப்பார்கள். ஹோமியோபதியில் மருந்தை தவறாக கொடுத்தால் அதை வெளியேற்ற இந்த மருந்து பயன்படுகிறது மற்றும் இந்த நேரத்தில் டானிக் மாதிரி இது நல்ல மருந்து. வலி மருந்து, நரம்புக்கு, ஆஸ்துமாவுக்கு, இது போன்ற நோய்களுக்காக அதிகமாக பலவகை மருந்து சாப்பிட்ட பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இது நல்ல மருந்து. சரும பகுதி அழுத்துவது போன்ற உணர்வு, வெய்யிலில் குப்புற படுத்துயிருப்பார்கள், சூரிய ஒளி (அதாவது வெய்யில்) முதுகு தண்டில் படுவதற்காக, தலை முழுவதும் ஏதோ நிரம்பிய மாதிரி மரண களைப்பில் அப்படியே படுத்து கிடப்பார்கள். ரொம்ப கவலையுடன் இருப்பார்கள் ரொம்ப எரிச்சல் படுவார்கள். மயக்கம் எதை பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கும். தலைவலியின் போது அழுத்துகிற மாதிரி இருக்கும். தொண்டையில், பொறியில், பின் மண்டையில் வலி ஓடி தலைக்கு வந்து விடும். (அங்கு வந்து உட்கார்ந்துகிச்சி என்றும் சொல்வார்.) கண்கள்:- பார்வை நரம்புகளில் வலி ஏற்பட்டு கண் எலும்பு குழியில் இழுப்பது போல, தெரிப்பது போல வலி, சுடான கண்ணீரும் வரும். மின்னல், மின்னுகிற மாதிரியும் வலியிருக்கும். பிறகு கண்ணில் தண்ணியா ஊத்தும். வாய்:- கொஞ்சம் கூட பசியே இருக்காது. நாக்கு மொத்தமாகவும், கோடாரியில் வெட்டிய மாதிரி வெடிப்பு இருக்கும். நாக்கின் மீது மஞ்சள் நிறமான சளி போர்த்திய மாதிரி இருக்கும். வாய் கசக்கும். வயிறு:- ஜீரண நீர் குறைந்து கொண்டே வரும். வயிற்றின் மேல் பகுதிகளில் எரிச்சல் மாறி, மாறி வரும். (LROBINIA, ARG-NIT, OREX-TANNATE) தாகம் அதிகமாகயிருக்கும், அதனால் தண்ணி இன்னும் வேண்டும் என்று குடித்து கொண்டேயிருப்பார்கள். அதுவே தொந்தரவாக இருக்குது என்று கூறுவார். இவர்களுக்கு நரம்பு தளர்ச்சினால் பசியே இருக்காது. மலம் :- முட்டை உடைத்து ஊத்தின மாதிரி பேதி. இதயம் :- துடிப்பு நின்னு, நின்னு போகிற மாதிரி உணர்வு. அப்படி நிற்பதால் மூச்சு திணறல் ஏற்படும். அதனால் அடிக்கடி மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள். இதனால் திறந்த வெளி (வெளி) காற்றில் இருப்பார்கள். மாடி படிகட்டு ஏறும் போது குட்டை, குட்டையாக மூச்சு வாங்குவார். மூச்சு திணறலினால் இரத்த ஓட்டம் பலஹீனமாகவும், நாடி துடிப்பு மென்மையாகவும் இருக்கும். இந்த மாதிரி இதய தொல்லையினால் சின்ன, சின்ன தொல்லைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதய வால்வுகளும், நரம்புகளும் பலஹீனமாக இருக்கும். துக்கம்:- நரம்பு பலஹீனத்தால் தூக்கமே இருக்காது. இந்த மருந்தை ஒரு முறை குறைந்த வீரியத்தில் கொடுத்தால் போதும் என்கிறார். வில்லியம் போரிக். கை, கால்களில்:- கை, தோள்பட்டை, கால்கள், பாதம், கால் மூட்டுகள், ஜில்லுன்னு ஆகி விடும். அசதியும் இருக்கும். கால் மூட்டுகளில் கிழிப்பது போன்ற வலியிருக்கும். காய்ச்சல்:- தொடர்ந்து உடல் பலஹீனமாகவே இருப்பதால் காய்ச்சல் ஏற்படும். உறவாக வரும் மருந்துகள்:- ஒப்பிட்டு பார்க்கவும் CHININUM உடன் FERRCITRICUM. ரொம்ப அசதியினால் வெளுத்து போய்விடுவாங்க, உடன் மூச்சு வாங்கும். இதற்கு CHININ-MUR. நரம்பு பலஹீனத்தால் கண்ணை சுற்றிலும் வலி உடன் குளிர்ந்து விடும். கண் பகுதி மட்டும். புகையிலை, சாராயம் குடித்து, கண்களை அதிகமாக பயன்படுத்திய பிறகு ஒய்வு இல்லாமல் அப்படியே படுத்து கிடப்பார். இதற்கு CENOTHERA. அதிகமான பேதி போன பிறகு ஏற்படும் நரம்பு தொல்லைகளுக்கு பிறகு அப்படியே படுத்து கிடப்பார். இந்த தொல்லைகளுக்கு பிறகு குழம்பி விட்டால் மருந்து MAROZAMIA – SPIRALIS.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------







Please Contact for Appointment