Wednesday, January 9, 2013

முடி உதிர்தல் சிறப்பு சிகிச்சை
முடி உதிர்தல்
நமது தோற்றத்தை அழகாக்குவது கூந்தலாகும். அந்த முடி உதிர ஆரம்பிக்கும் போது கூடவே கவலையும் ஆரம்பிக்கும்.
முடி உதிர்தல் என்பது வெறும் அழகு பிரச்சனையல்ல. உடலில் ஏற்படும் சத்து குறைபாடோ அல்லது வேறு நோய்களோ கூட முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம்.

எனவே முடி உதிர்தலை அலட்சியபடுத்துவது நல்லதல்ல.

அதேசமயம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது இயல்பு. உடல்நல குறைபாடு இருந்தாலோ, பராமரிப்பு போதாமல் இருந்தாலோ இதை விட அதிகமாக உதிரும்.

முடி உதிர்தல் காரணங்கள்
Ø  உடலில் ஏற்படும் பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படை காரணமாகும்.
Ø  பொடுகு - செபோரிக் டெர்மட்டைட்டிஸ். தலை தோலின் மேல் அடுக்கில் காணப்படும். மீன் செதில் போல் லேசாக உதிரும்.
Ø  வேதிப்பொருள் நிறைந்த ஷாம்பு, சோப்புகள், அழகு சாதனப்பொருட்கள், உபயோகிப்பது,
Ø  கூந்தல் நிறமி (Hair Dye) உபயோகிப்பது, முடியை ஸ்டிரெய்ட் செய்வது, முடியை சுருள் சுருளாக்குவது போன்றவைகளால் முடி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால், முடியின் தன்மையே பாதிக்கப்பட்டு முடி உடைந்து, சிதைந்து போவதால் அதிகம் உதிர்கிறது.
Ø  தூசு, மாசு நிறைந்த பகுதியில் இருப்பது, அதிக நேரம் வெயிலில் இருப்பது போன்ற காரணங்களால் கூட முடி உதிரலாம்.
Ø  ஹார்மோன் குறைபாடு முக்கியமாக தைராய்டு பிரச்சனை,
Ø  பரம்பரை வழுக்கை முக்கிய காரணம்.
Ø  சத்து குறைபாடு, சரிவிகித உணவு உட்கொள்ளாமல், ஒரே மாதிரியாக பிடித்தமான உணவையே (ஜங்க் புட்ஸ்) சாப்பிடுவது... இதனால் முக்கிய சத்துக்களும் பிரதானமாக புரதசத்து கிடைக்காது... பருப்பு வகைகள், நட்ஸ், உலர்பழங்கள் மற்றும் அசைவ உணவு வகைகளில் உள்ள ப்ரோட்டீனும் சரிவர கிடைக்காததாலும் முடி உதிர்கிறது.
Ø  நோய்த்தொற்றுகளால் உருவாகும் நோய்கள். டைபாய்டு, மலேரியா போன்ற நோய் தாக்கிய பின்பு, முடி உதிர்தல் அதிகமாகலாம்.
Ø  மன அழுத்தம், மனக்கவலை, வேலைப்பளு முதலியவைகள் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது

பெண்களுக்கு
  • உடம்பை அழகாக ஸ்லிம்மாக மெயின்டெயின் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பல சத்தான உணவு வகைகளை இன்றைய பெண்கள் தவிர்கிறாகள். குறிப்பாக கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் புரதம், அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் இரும்பு சத்து (அயர்ன்) உணவுவகைகள் உட்கொள்ளாதபோது முடி கடுமையாக உதிர ஆரம்பிக்கும்.
  • மாதவிடாய் கோளாறுகள், மாதா மாதம் மாதவிடாய் மூலம் ரத்தப்போக்கு ஆவதால் அதை ஈடுகட்டும் அளவுக்கு சத்தான உணவு உட்கொள்ளாமல்  இருக்கும்போது அனீமியா எனப்படும் இரத்தசோகை பல பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனால் டீன்ஏஜ் வயதிலும் முடி கொட்டும்.
  • PCOD எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரிஸ் இதனால் பீரியட்ஸ்  ரெகுலராக வருவதில் மட்டும் பிரச்சனையல்ல. முடி  வளர்வதிலும்  பிரச்னை  தருகிறது.  முடியின்  தன்மை  மிக மெல்லியதாக மாறி, பலவீனமாகி, முடி அதிகம் உதிர ஆரம்பிக்கிறது.

கூந்தலின் பயன்கள்
v  முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை.
v  மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை முடி சுட்டிக்காட்டும்.
v  கதகதப்பை அளிக்கிறது,
v  முடி, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது,
v  ஈரப்பதத்தைக் காக்கிறது.
சிகிச்சை
முடி உதிர்தலை வெறும் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று கருதி அழகு சாதனப்பொருட்கள் மூலமாகவோ அழகுநிலையங்கள் மூலமாகவோ சரி செய்ய நினைப்பது பலனலிக்காது.

தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனை மூலம் உடலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து சரியான கூந்தல் தைலம் மற்றும் ஷாம்பு உபயோகிப்பது நீண்ட நாள் பலனைத்தரும். எனவே அனுபவம் வாய்ந்த மருத்துவரின் சிகிச்சை நல்ல பலனலிக்கும்.

முடி உதிர்தல் பிரச்சனையால் பாதித்த பலருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்புகொள்ளவும் சிகிச்சைக்கும் இங்கே கிளிக் செய்யவும்.

முடி உதிர்தல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற இங்கே கிளிக் செய்யவும்
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்--==--

Please Contact for Appointment