Thursday, March 14, 2013

மூக்கடைப்பு - சைனசைட்டிஸ் காரணமும் சிகிச்சையும்







அடிக்கடி மூக்கடைப்பா
எல்லா வயதினருக்கும் மூக்கடைப்பு சைனசைட்டிஸ், என்பது ஜலதோஷம், அலர்ஜி, போன்ற சாதாரண காரணங்களால் ஏற்படுகிறது. இதை தவிர்த்து சில முக்கிய காரணங்களும் உண்டு.

நோய் அறிகுறிகள்.
Ø  மூக்கடைப்பு,
Ø  தும்மல்,
Ø  மூக்கினுள் அரிப்பு நமைச்சல்
Ø  மூக்கிலிருந்து சாதாரனமாகவோ எரிச்சலுடனோ நீர் அல்லது சளி வெளிப்படுதல்.
Ø  காலநிலை மாறும்போதோ, குளிர்ந்த உணவுகளை உட்கொள்ளும் போதோ மேற்கூறிய தொந்தரவுகள் அதிகரித்தல்.
Ø  தலைவலி,
Ø  தலையை ஆட்டும்போது தலையினுள் தண்ணீர் ஆடுவது போன்ற உணர்வு.

சாதாரன காரணங்கள்
ü  அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை, (இதில் நிறைய வகை உண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகள் மாறுபடல்லாம்)
ü  காலநிலை மாற்றம்,
ü  நோய்த்தொற்று,
ü  நோய் எதிர்ப்புதன்மை குறைபாடு.

சில முக்கியமான காரணங்கள்
v  ஒரு சிலருக்கு மூக்கினுள் உள்ள "செப்டம்" எலும்பு வளைந்து இருக்கும் இதனால் சுவாசப்பாதையில் எலும்பு குறுக்கிட்டு மூக்கடைப்பு இருக்கும்
v  "பாலிப்" என்கிற சதை வளர்ச்சியை "பீல்டு க்ரேப்ஸ்" என்பார்கள். உரித்த திராட்சைப்பழங்களைப் போல. கொத்துக் கொத்தாகத் தோற்றம் அளிப்பதால் இப்படி சொல்கிறார்கள்
v  மூக்கு ஜவ்வு, மியூக்கஸ் மெம்பரைன் போன்ற பகுதிகளில் அலர்ஜியாலோ, "காளான்" கிருமிகளாலோ இந்தச் சதை வளர்கிறது. இது வளரும் போது சைனஸ் அறைகளின் வாசலை அடைக்கிறது. அதனால் சைனஸில் சளி தேங்கி, சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக "பாலிப்" மேலும் பெரிதாக வளரத் துவங்குகிறது.
v  இப்படி "பாலிப்" சைனஸ் தொல்லை தொடங்கும்போது பேச்சு பாதிக்கப்படும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். வாசனை டேஸ்ட் பிரச்னைக்கும் ஆளாகிறார்கள்.
v  "பாலிப்" குறையைப் போக்குவதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்தும் இவர்கள் குணமாக வழியிருக்கிறது!
v  சிலவகை பாலிப்கள் ஆஸ்பர்ஜில்லஸ் என்கிற காளான்களால் ஏற்படுகிறது.
v  சிலருக்கு கால நிலை மாறும் போது சைனஸ் தொந்தரவு ஆரம்பிக்கும்,
v  சிலருக்கு தூசு மற்றும் ஒத்துக்கொள்ளாத பொருட்களால் சைனஸ் வரலாம்.
v  இவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் மருந்துகள் மூலம் நல்ல பலன் பெறலாம்.

சிகிச்சை
நவீன மருத்துவத்தில் ஆன்டி அலர்ஜிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகள் ஆரம்பத்தில் பலனலித்தாலும் பிறகு சரியாக வேலை செய்யாது. மேலும் தூக்கம், அசதி மற்றும் போதையிலிருப்பது போன்ற விளைவுகள் ஏற்படலாம்

ஹோமியோபதி மருத்துவம்.
ஹோமியோபதியில் மூக்கடைப்பு, தும்மல் சளி, சைனசைட்டிஸ் போன்ற தொந்தரவுகளுக்கு பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் உண்டு. தகுதி வாய்ந்த ஹோமியோபதி சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெறும் போது நல்ல பலன் பெறுவது நிச்சயம்.


மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment