Wednesday, January 23, 2013

எக்ஸிமா - அட்டோபிக் டெர்மடைடீஸ் சிறப்பு சிகிச்சை மையம்



எக்சிமா
எக்ஸிமா அல்லது அட்டோபிக் டெர்மடைடீஸ் எனப்படுவது தமிழில் கரப்பான் படை என்று அழைக்கப்படுகிறது.

மேல் தோலில் உண்டாகும் அழற்சியினால்(வீக்கம்) எக்சிமா ஏற்படுகிறது..
பிறந்த குழந்தைகளிலிருந்து, முதியோர்கள் வரை எல்லா வயதினரையும் தாக்கும் நோய். சிலருக்கு வயதாக எக்சிமா குறையும். சிலருக்கு அதிகமாகும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தோன்றி, மறைந்து தொல்லை தரும்.

சிலருக்கு இந்த வியாதி உடலின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பாதிக்கும். சிலருக்கு எங்கு வேண்டுமானாலும் உண்டாகலாம். எக்சிமாவை, ஏதோ ஒரு ஒவ்வாத பொருள் ஏற்படுத்தும் விளைவுக்களுக்கு எதிரான எச்சரிக்கை என்று சொல்லாம்.

வகைகள்
எக்சிமாவில் பலவகைகள் உண்டு. முக்கியமானவை.

அடோபிக் எக்சிமா (Atopic Dermatitis)
இது தான் பரவலாக காணப்படும் எக்சிமா. அடோபிக் என்றால், ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள் உடலில் ஊடுருவது ஒரு இடத்தில் அதன் விளைவுகள் உடலின் வேறு இடத்தில் தோன்றும். உதாரணமாக ஒரு சில பொருட்களை உட்கொண்டால், தோலில் எக்சிமா உண்டாகும். இந்த வகை எக்சிமா, தொட்டாற்சுருங்கி போல அதிக உணர்ச்சி உள்ளவர்களுக்கு அதிகமாக வரும். ஆஸ்த்மா, உள்ளவர்களையும் அதிகம் தாக்கும்.

அறிகுறிகள்
  • அரிப்பு, அதுவும் தாங்கமுடியாத அரிப்பு.
  • தோலில் நீர் மற்றும் சீழ் கட்டிகள், சிரங்குகள் தோன்றும்.
  • தோல் சிவந்து தடிமனாகும்.
  • தொடர்ந்து  சொரிவதால் தடிப்புகள் புண்களாகும்
  • புண்களில் நீர் கோர்த்து கொண்டு கசியலாம். இதை அழும் எக்சிமா (Weeping Eczema) என்பார்கள்.
  • சினைப்பு உண்டாகும், பொதுவாக சினைப்புகள் கைகள், முழங்கைகள், முழங்கால்களுக்கு பின் பகுதிகளில் தோன்றும்.
  • கொப்புளங்கள்,
  • வீக்கம்,
  • புண் ஏற்படுதல்,
  • செதில்கள் தோன்றுதல்
  • சீழ்போலவும் நீர் போலவும் புண்களிலிருந்து கசிவு ஏற்படுதல்
இவையெல்லாம் முக்கிய அறிகுறிகளாகும்.

காரணங்கள்
ஒவ்வாமை, மன அழுத்தம் இவைகள் காரணமாகலாம். பரம்பரையும் ஒரு காரணம்.

ஸ்பரிச ஒவ்வாமை எக்சிமா ( Contact Allergic Dermatitis)
இது ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் உடலில் படுவதால், தோலில் அழற்சி ஏற்படும்.
இதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் வட்டமாக தனித்திட்டாக, அரிப்பு, புண் மற்றும் சினைப்பு தோன்றும்.
Ø  சினைப்பில் அரிப்பு மிக அதிகமாக இருக்கும்.
Ø  ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள்கள் எரிச்சலையும், தடிப்பையும்
Ø  உண்டாக்குகின்றன. அலர்ஜி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
Ø  வாசனை பொருட்கள் பவுடர், கிரீம்கள், நகபாலிஷ், பாலீஷை எடுப்பவை, சென்ட்டுகள், முதலியன.
Ø  மருந்துகள் பெனிசிலின், பல ஆன்டிபயாடிக்குகள், போன்றவை.
Ø  அணிகலன்கள் உலோகங்கள் நிக்கல் பெரும்பாலும் அலர்ஜியை உண்டாக்கும். வெள்ளி, தங்கம் கூட சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம்.
Ø  சுத்திகரிக்கும் பொருட்கள் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயில், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், அல்கைலைன் இவை மற்றும் சோப், துணி துவைக்கும் டிடர்ஜெண்டுகள்,
Ø  தாவரங்கள் பல தாவரங்கள் பார்தேனியம், நெரிஞ்சில் போன்றவை ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள் எதுவானாலும், பாதிக்கப்பட்டவருக்கு உண்டாவது அரிப்பு, சினைப்புகள்.

செபோரிக் எக்சிமா ( Seborrheic Dermatitis)
இந்த வகை எக்சிமா தாக்க குறிப்பிடத்தக்க காரணம் கண்டறியப்படவில்லை. தலையில், முகத்தில், சில சமயங்களில் வேறு இடங்களில், செதில்களை தோற்றுவிக்கும். மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளை வெகுவாக பாதிக்கும் இந்த எக்சிமா, பெரியவர்களையும் தாக்கும்.
Ø  இது முதலில் தலையில் பொடுகு போல் தொடங்கும்.
Ø  முடி உதிர்தல், அரிப்பு சில சமயங்களில் இருக்கும்.
Ø  தீவிர நிலையில் பருக்கள் போன்ற சிறிய கட்டிகள், தலை, காதுக்கு பின்னால், கண் புருவங்களில், மார்பில், மேல் முதுகில் தோன்றலாம்.
Ø  குழந்தைகளுக்கு முகத்தில் சிவப்பு நிற பருக்கள் தோன்றும்.
Ø  சிறு குழந்தைகளுக்கும் ஏற்படும் இந்த எக்சிமா, பொதுவாக அரிப்பு, நமைச்சலை உண்டாக்குவதில்லை.

கவனிக்க
ü  எக்சிமா போன்ற தோல் நோயுள்ளவர்கள் சாதாரன சோப்பை பயன்படுத்தக் கூடாது. கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தலாம். தரமான மூலிகை சோப்புகளை உபயோகிக்கலாம்.
ü  மிதமான சூடுள்ள நீரில் குளிக்கவும். குளித்தவுடன் துவாலையால் உடலை அழுத்தி துடைக்காமல், மெதுவாக நீரை, ஒற்றி எடுக்கவும்.
ü  கம்பளி ஆடைகள், போர்வைகள் செயற்கை இழை ஆடைகள் இவற்றை கூடிய வரை தவிர்க்கவும்.
ü  துவைக்கும் போதும், பாத்திரங்களை கழுவும்போதும் டிடர்ஜென்ட் சோப்புகளை பயன்படுத்தும் போது கையுறைகளை அணியவும், டிடர்ஜென்ட்டை தொடாமல் வேலை செய்யலாம்.
ü  உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளை கண்டறிந்து கொள்ள வேண்டும்.
ü  மசாலா, காரம், மாமிசம், முட்டை, பதனிடப்பட்ட உணவுகள் இவற்றை தவிர்க்கவும். வெந்த காய்கறிகள், பரங்கிக்காய், பழங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளவும். புளித்த தயிரை தவிர்ப்பது நல்லது. தர்பூசனி பழம் நல்லது. இதை அடிக்கடி உட்கொள்ளவும்.

சிகிச்சை
நவீன மருத்துவத்தில் ஸ்டீராய்ட் மருந்துகளை வெளிப்பூச்சாகவும், உள்ளுக்கும் கொடுப்பார்கள். இது பக்கவிளைவுகளையும் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.
ஹோமியோபதி மருத்துவத்தில் நோயின் அறிகுறிகளுக்கேற்ப நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தும் மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்..






























விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

--==--

Please Contact for Appointment