கேள்வி: டாக்டர் அவர்களுக்கு , எனக்கு ஒரு சந்தேகம். பெண் பாலியல் தொழிலாளி என்னிடம் வாய் வழி புணர்ச்சி செய்வதன் மூலம் எனக்கு எயிட்ஸ் வர வாய்ப்பு உள்ளதா? அப்போது நான் ஆணுறை அணிவதில்லை.
பதில்: ஆம், உங்களுக்கு
எச். ஐ. வி கிருமி வர வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள பரிசோதனைகள் படி, எச்.ஐ.வி நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில் எச்.ஐ.வி
கிருமியை காண முடிகிறது. அதாவது, எச். ஐ. வி நோயாளிகளில் 100% பேரின் ரத்தத்தில் எச்.ஐ.வி
கிருமியை காண முடிகிறது, ஆனால்
அதே நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில்தான் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது. இவ்வாறு
எச்சிலில் காணப்படும் எச்.ஐ.வி கிருமிகளும் குறைந்த அளவிலேயே (low
concentration) உள்ளன.
இருந்தபோதிலும் எச் ஐ வி கிருமிகள் எச்சிலில் இருப்பதால், வாய் வழிப் புணர்ச்சி மூலம்
உங்களுக்கு இந்த கிருமி தொற்ற வாய்ப்பு உள்ளது.
அதனால்,
அந்த பெண் பாலியல் தொழிலாளிக்கு எச்.ஐ.வி இருந்தால், உங்களுக்கும் அது தொற்ற வாய்ப்பு உள்ளது, உடன் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இதனை தடுக்க மிக எளிதான வழி ஆணுறையை உபயோகிப்பது தான். ஆணுறை உபயோகித்து, உங்கள்
வாழ்க்கையையும், உங்கள் துனைவியின் வாழ்க்கையையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line
--==--