Wednesday, March 13, 2013

ஆண்மைக் குறைபாடு - தீர்வும் சிகிச்சையும்ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?
இதில் பல வகைகள் இருந்த போதும் ஆண்குறி விறைப்படையாமல்இருப்பது மிக முக்கியமானதாகும்.

உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதால் உடலுறவு முழுமை பெறாமலிருக்கும். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இருப்பினும் இது தொடர்ச்சியாக நிகழும்போது அது  Erectile Dysfunction என்று அழைக்கப்படுகிறது.

v  ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு விறைப்பின்மை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
v  சிலருக்கு விறைப்பின்மை லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
v  வயது அதிகமாகும்போது விறைப்பின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். 

இளைஞர்களுக்கு விறைப்பின்மை ஏற்படுவது பெரும்பாலும் உள்ளம் சார்ந்ததே.
நிறைய பேர் விறைப்பின்மை குறைபாடை மறைத்து நண்பர்களிடம் வாய்ச்சொல்லில் வீர்ர்களாக காண்பித்துக்கொள்வார்கள். ஆனால் படுக்கை அறையில் நடக்கும் உண்மை வேறு.

இதன் முக்கியமான விஷயம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார்களே தவிர சரியான மருத்துவ சிகிச்சை பெறுவதில்லை.

விறைப்பின்மைக்கான காரணம்:
பலருக்கு இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். விறைப்பின்மை வேறு நோய்களின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

Ø  ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
Ø  நீரிழிவு (சர்க்கரை நோய்) ஒரு முக்கிய காரணமாகும். நிறைய நீரிழிவு நோயளிகளை இப்பிரச்சனை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Ø  போதைப் பொருள் உபயோகித்தல் மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மது குடித்தல்,மற்ற போதைப்பொருள் பயன்படுத்துதல் விறைப்பின்மையை அதிகப்படுத்தும்.
Ø  சிலருக்கு இது மன உணர்ச்சிகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். மன அழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை போன்ற உளவியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.
Ø  உடலுறவு பற்றிய பதற்றம் (Sex Performance Anxiety), உடலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (Relationship Failure, Fear of intimacy) போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
Ø  சிலருக்கு சிறு வயதிலிருந்து அதிகப்படியான கைப்பழக்கம் இருந்தால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக விறைப்பின்மை ஏற்படலாம்.
Ø  புரஸ்டேட் நோய், முதுகு தண்டில் ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
Ø  வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக்குறைபாடு ஏற்படலாம். இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
Ø  மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
Ø  விறைப்பின்மை உள்லம் சார்ந்ததா அல்லது  உடல் சார்ந்ததா?
Ø  பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உள்ளம் சார்ந்ததாகவும் இருக்கிறது

இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
மனநிலை சார்ந்த அறிகுறிகள்
ü  திடீரென விறைப்பின்மை ஏற்படும்,
ü  சில நாட்கள் விறைப்பு ஏற்படும், சில நாட்கள் விறைப்பு ஏற்படாது,
ü  பொதுவாக 40க்கு உட்பட்ட வயதினருக்கு உள்ளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம்.
ü  தினமும் அதிகாலையில் தூக்கத்தின்போது ஆண்களுக்கு தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உள்ளம் சார்ந்ததே.
ü  உடலுறவில் ஆர்வமற்றுப் போவதும் உள்ளம் சார்ந்த்தே.

உடல் சார்ந்த அறிகுறிகள்
ü  ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
ü  எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
ü  பொதுவாக 40க்கு மேற்பட்ட வயதினருக்கு ஏற்படும் விறைப்பின்மை.
ü  நிரந்தரமாக அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படையாமல் போதல்.
ü  உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு விறைப்படையாமல் போதல்.

மருத்துவ பரிசோதனை
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டோஸ்டீரான் குறைபாடு இருக்கிறதா என அறிய இரத்தப்பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார்.

ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவை பரிசோதிக்கப்படும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன பரிசோதிக்கப்படும்.

சிகிச்சை
v  நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம்.
v  புகைத்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். அல்லது நிரந்தரமாக நிறுத்துவது மிகச் சிறந்தது.
v  நவீன மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் நல்ல பலனைக் கொடுக்கின்றன.
v  ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
v  நெஞ்சு வலிக்கு Trinitrate  உபயோகிப்பவர்கள் அதனுடன் நவீன மருந்துகளை சேர்த்து உபயோகிக்கக் கூடாது.

நவீன மருந்துகளை பொருத்தவரையில் உடனடி பலன் இருந்தாலும் நிறைய பக்க விளைவுகள் உண்டு.

ஹோமியோபதி மருத்துவம்
ஆண்மைக்குறைபாடு & விரைப்பின்மைக்கு நோயின் அறிகுறிகளுக்கேற்ப்ப பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் உள்ளன.
அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெற்றால் நல்ல பலனடையலாம்.


மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment