Tuesday, March 12, 2013

பெண்ணின் பருவ வயது மாற்றங்கள்





கேள்வி: பதிமூன்று வயது பெண் நான், எனது உடலில் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. இதைப்பற்றி மற்றவர்களிடம் கேட்க தயக்கமாகவும் பயமாகவும் உள்ளது. தயவுசெய்து விளக்கவும்.

பதில்: பெண்கள் உடல் ரீதியாக குழந்தைப்பருவத்தில் இருந்து, அவளே குழந்தை பெரும் பருவத்தை எய்துவது ஆங்கிலத்தில் ப்யூபர்ட்டி (Puberty) எனப்படுகிறது.

முதல் முறையாக மாத விடாய் (Menarche) வருவதை பெண்களின் உடல் வளர்ச்சியின் ஒரு சிறிய பகுதியாகவே மருத்துவ சமூகம் பார்க்கிறது.
இப்போது நாம் பார்க்க இருப்பது, ஒரு பெண், சிறுமிப் பருவத்தில் இருந்து முழுமையாக பெரிய பெண் ஆகும் நிலைகள் பற்றியது:

குறிப்பு: ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரம்பரியம், உணவு முறைகளுக்கு ஏற்ப, இந்த வயதுகள் சற்றே வித்தியாசப்படும். நாம் இங்கே எடுத்துக்கொள்வது சராசரியான வயதுகளைத்தான்.

9 – 10 வயது:
Ø  பெண்கள் வேகமாக, உயரமாகவும், எடை கூடவும் ஆரம்பித்து விடுவார்கள்.
Ø  இந்த வயதில் அவர்களுக்கு மார்பு வளர்ச்சியோ, அல்லது அந்தரங்கப் பகுதியில் முடி வளர்ச்சியோ இருக்காது.

10-11 வயது:
Ø  இந்த வயதுகளில், பெண்ணுறுப்பின் மீது லேசாக முடி வளரத் தொடங்கும். பூனை முடி மறையத் தொடங்கி, லேசாக கருமுடியாக வளர ஆரம்பிக்கும்.
Ø  மார்பகத்தை சுற்றி உள்ள கருவட்டம் பெரிதாக ஆரம்பிக்கும். மார்பு தசையும் லேசாக ஆரம்பித்து, மார்பு மெல்ல வெளியே புடைக்க ஆரம்பித்து விடும். இதனை காம்பு மொட்டு ( Nipple Buds ) என்று அழைப்பார்கள்.
Ø  போன வயதுக்காலத்தில் நடக்கும் திடீர் உடல் வளர்ச்சி சற்றே மட்டுப்படும்.

11 – 12 வயது:
Ø  கிட்டத்தட்ட 75% பெண்கள் இந்த வயதில் முதல் முறையாக மாத விடாய் வெளியேறி விடும். இதனை ஆங்கிலத்தில் Menarche என்று சொல்வார்கள். இதனைத் தான் நாம் பெண்கள் வயதுக்கு வந்து விட்டதாககருதுகிறோம். பலர் பெண்ணுக்கு மாத விலக்கு ஆரம்பித்து விட்டாலே, அவள் கர்ப்பம் தரிக்க தயாரானவள் என்று நினைக்கிறார்கள், இது ஒரு தவறான கருத்தாகும். உண்மையில் பல பெண்கள் மாத விலக்கு வந்தாலும், சில வருடங்கள் கழித்தே கர்ப்பம் தரிக்க உடல் ரீதியாக தயாராவார்கள்.
Ø  முடி வளர்ச்சி பெண்ணுறுப்பிலும், அதைச் சுற்றியும் நன்றாக வளரத்தொடங்கும்.
Ø  மார்பகங்கள் கருவட்டத்தை தாண்டியும் நன்றாக வளரத் தொடங்கும்.

12 -13 வயது:
Ø  பெண்களுக்கு மாத விடாய் முதன் முறையாக வந்தவுடன், அவர்கள் கிட்டத்தட்ட ஒரு அரை அடி உயரம் தான் வளருவார்கள். அதற்கு மேல் அவர்களின் வளர்ச்சி நின்று விடும்.
Ø  உடலின் கொழுப்பு அளவு (25 – 26 %), பெரியவர்களுக்கு உள்ள அளவுக்கு நிகராக ஆகி விடும்.
Ø  3. மார்புகள் வளர்ச்சி நன்றாக பெருகும்.

13-15 வயது:
Ø  மார்பகங்கள் முழு வளர்ச்சி பெற்று, உடலை மீறித் தெரியும்.
Ø  பெண்ணுறுப்பில் முடி வளர்ச்சி பெரியவர்களுக்கு வளரும் விதமாக இருக்கும். பூனை முடிகள் முழுமையாக உதிர்ந்து விடும்


இந்த விஷயங்கள் மிக இயல்பானதே, இதைப்பற்றி உங்கள் பள்ளி ஆசிரியையிடமோ அல்லது உங்கள் தாயிடம் கூட கேட்டு தெரிந்து கொள்ளலாம், தயக்கம் வேண்டாம்.  



மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 




விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment