Thursday, April 25, 2013

வெட்கப்பட ஏதுமில்லை
வெட்கப்பட ஏதுமில்லை

Ø  நிறைய பெண்கள் கூச்சத்தினாலோ அல்லது தயக்கத்தினாலோ மாதவிலக்குக் கோளாறுகள் கருப்பை பிரச்சினை ஏற்படும் போது மருத்துவரிடமோ தாயிடமோ அல்லது கணவரிடமோ வெளிப்படையாக கூறி ஆலோசனை கேட்பதில்லை. சிகிச்சை மேற்க்கொள்வதில்லை.

Ø  சிறுநீர்க் குழாயும் மலக் குடலும் பிறப்புறுப்பினருகில் இருப்பதால் அதில் நோய்த் தொற்று ஏற்ப்பட்டால் வெளியில் கூறாது மறைத்து விடுவார்கள்.

Ø  ஆணுக்குத் தலைவலி என்றால் எப்படியோ அப்படித்தான் பெண்ணின் மாதவிலக்குச் சமயங்களில் ஏற்படும் கோளாறுகளும் என்பதை உணர வேண்டும்.

Ø  பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளை அசிங்கமாக நினைத்து ஒதுக்கி வைக்கக்கூடாது.

Ø  உடலிலும், உள்ளத்திலும், ஒழுக்கத்திலும் நமக்கு விழிப்புணர்வு தேவை.

Ø  பெண்கள் தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து விட்டுத் தங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படையாக நெருங்கியவர்களிடமோ, மருத்துவரிடமோ கூறி சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

Ø  உடல்ரீதியாக சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட உடனுக்குடன் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. அசிங்கம் எதுமில்லை.

Ø  சிறு வயதில் அல்லது பருவ வயதில் செய்த தவறுகள் அல்லது சிகிச்சை மேற்கொள்ளாத சிறு கருப்பை கோளாறுகள் திருமணத்திற்கு பின் மலட்டுத் தன்மை உட்பட பலவிதமான தீவிர பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

Ø  பெண்கள் வயதுக்கு வரும் முன்னும் வந்த பின்னும் பெற்றோர் அவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Ø  பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் நிகழும் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். இதுவே மாதவிலக்கு, மகளிர் நோய்கள் மற்றும் பேறுகாலப் பிரச்சனைகளின் போது நல்லவிதமான அணுகு முறையை மேற்கொள்ள அடிப்படையாக அமையும்.

Ø  இளம்பெண்களுக்கு பூப்பெய்தும் செயல் இன்ன விதமாய் நிகழும் என்று முன்கூட்டியே பெற்றோரும் பூப்பெய்திய தோழிகளும் சரிவரக் கூறவதில்லை, பூப்படைந்த பின்னரும் தோழியர் ஒருவரோடு ஒருவர் அதைப்பற்றிப் பேசுவதுமில்லை.

Ø  எதிர்பாராத நேரத்தில் பூப்பெய்ததும் என்னவோ ஏதோவென்று பயந்து மனக்குழப்பத்திற்கு ஆளாகும் இளம் பெண்கள் இன்றும் உண்டு. இத்தகைய அறியாமையிலேயே அவர்களை வைத்திருக்கக் கூடாது.

Ø  ஆண்களிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் வேறுபட்ட உடல் அமைப்புகளும், தன்மைகளும் பெண்களிடம் இருப்பதால் அது பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

Ø  முன்பெல்லாம் மாதவிலக்குக் காலங்களில் மங்கையரை தீண்டத்தகாதவர் அசுத்தமானவர்கள் என்று குறிப்பிட்டு அன்றாட வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைக் கடைப்பிடிக்கச் செய்தனர்இது பெண்களுக்கு ஓய்வு அளிப்பதற்கு செய்யப்பட்டதேயன்றி ஒதுக்கி வைக்க அல்ல..

Ø  பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பெண்கள் பூப்பெய்தி விடுவர். பூப்பெய்திய நாள் முதற்கொண்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை மாதவிலக்குச் சீராக வருகிறதா என்று தாய் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு உஷ்ணத்தால் வெள்ளைப்படலாம்.

Ø  இதை அவர்கள் வெட்கத்தின் காரணமாக தாயிடம் சொல்லாமல் விட்டு விட்டால் நாளடைவில் அதுவே கருப்பைக் கட்டி மற்றும் கருப்பைக் கோளாறுகளுக்கு மூலகாரணமாக அமைந்து விடும். இதனால் பிற்காலத்தில் கருத்தரிக்கின்ற வாய்ப்பையும் அவர்கள் இழக்க நேரிடும்.

Ø  பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்துக்களி புழுங்கலரிசிக் கஞ்சி கேழ்வரகு அடை முருங்கைக்கீரை போன்றவற்றை அச்சமயங்களில் கட்டாயம் சாப்பிடச் சொல்வது சொல்வது நம் முன்னோரின் வழக்கம். இதனால் கருப்பை சுத்தம் பெறும் இடுப்பு எலும்புகளில் வலிமைப்படும். கரு முட்டை சீராக உருவாகவும் கருப்பை சீராக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது.

Ø  அரச மரத்தைச் சுற்றி வந்து சில நிமிடங்கள் அதன் நிழலில் அமர்ந்த தியானம் செய்வர். இதன் நோக்கம் அரச மரத்தடியில் அமர்ந்தால் கருப்பைக் கோளாறுகள் வரா கருத்தரிப்பில் தடை ஏதும் இராது என்ற நம்பிக்கை. உண்மையில் சித்த மருத்துவ விதிப்படி ஆலமரம். வேம்பு புங்கமரம். நெல்லி மற்றும் அரச மர நிழல்களும் அவற்றின் காற்றும் நம் மூச்சுவழி ரத்தத்தில் கலந்து நுரையீரல் கருப்பையில் சேரும் கிருமிகளை அழித்து தூய்மைப்படுத்துகின்றன.

Ø  பெண்கள் தங்களின் பிறப்புறுப்புகளைச் சுத்தமாகச் சுகாதாரமாக வைத்துக் கொள்ளாததால் பல்வேறு கருப்பைக் கோளாறுகளுக்கு உள்ளாகிறார்கள்.

Ø  மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் இந்த நவீன காலத்திலும் மாதக் கணக்கில் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்திய துணிகளையே துவைத்துத் துவைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிலுள்ள நுண்கிருமிகள் பிறப்புறுப்பில் நோய் ஏற்படக் காரணமாகி மலட்டுத்தன்மை உள்பட இன்னபிற நோய்கள் தோன்றச் செய்து விடுகின்றன. சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தினால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

Ø  சானிட்டரி நாப்கின்கள்  பயன்படுத்த விரும்பாதவர்கள் அல்லது இயலாதவர்கள். மிகவும் குறைந்த விலையில் விற்கும் பருத்தி நூல் புடைவை வாங்கி துண்டுகளாக்கி அதன் நடுவில் பஞ்சுப் பொதியை வைத்துப் பயன் படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்திய பின் அவற்றை எறிந்து விடலாம்.

Ø  குறைந்த விலையிலான ஒரு புடைவையை ஆறு மாதங்கள் வரை கூடப் பயன்படுத்த முடியும். அல்லது வீட்டில் உபயோகித்த பருத்திப் புடைவைகளைக் கூட டெட்டாலினால் சுத்தம் செய்து மேற்கூறியபடி உபயோகிக்கலாம்.

Ø  ஆணும் பெண்ணும் கலந்துரையாடியபடி இன்பம் அனுபவிப்பதன் பயனாகத்தான் பெண் கருத்தரிக்கிறாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அடிப்படை உண்மையும் அதுதான். ஆனால் ஆண், பெண் சேர்க்கையினால்தான் கருதரிக்கிறது என்பது வயது வந்த சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த காலத்தில் கூட தெரியாமல் உள்ளது.

Ø  அதே போல் கருத்தரித்தலுக்குப் பின் நடைபெறும் செயல்கள் பற்றிய நுணுக்கமான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கும் பெண்களும் நம் நாட்டில் மிகக் குறைவு.

Ø  நமது பெண்களுக்கு முக்கியமாகத் தெரிய வேண்டியவை ஆண் பெண் உடல் அமைப்பு பாலுறுப்புகளின் செயல்பாடுகள் சேர்க்கை விளக்கம் கருவுற்ற காலத்தில் எப்படி இருக்க வேண்டும்குழந்தை பிறப்புக்குப் பின் தாயும் சேயும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படிஎத்தனை காலத்திற்குப் பின் அடுத்த கர்ப்பத்திற்கு இடம் தர வேண்டும் போன்றவையாகும்.

Ø  அயல் நாடுகளில் ஆண் பெண் உடற்கூறு உடலுறவு நடவடிக்கைகள் குழந்தைப் பேறு போன்றவை பற்றிய அறிவை ஆணும் பெண்ணும் சிறிதளவாவது கொண்டுள்ளனர். அதன் காரணமாகத்தான் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் கருச்சிதைவு கருக்கலைப்பு போன்றவை மிக மிகக் குறைவு.

Ø  எனவே முறையான பாலியல் கல்வியினை ஆண்களும் பெண்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.

Ø  பெண்கள் தயக்கமின்றி தங்களின் அந்தரங்க பிரச்சனைகளை மருத்துவரிடமோ அல்லது நெருங்கியவர்களிடமோ பகிர்ந்து தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் பெரிய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line==--==

Please Contact for Appointment