வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்
வாழையின்
உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி வேறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும்
கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.
வாழைத்
தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப்
பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.
வெட்டிய
வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும்
வலி குறையும்.
வாழைத்
தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில்
குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.
வாழைப்பூவை
வேகவைத்து பொரியல் செய்து உண்பதால் அஜீரணம் நீரழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும்
வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்.
வாழைப்பூச்சாற்றுடன்
கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும்.
கை, கால்
எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன்
பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==