Saturday, May 4, 2013

கற்றாழை மருத்துவப்பயன்கள்







கற்றாழை

  • கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறுகற்றாழை,செங்கற்றாழை, என பல வகைகள்உள்ளன. இதில் சிறுகற்றாழையும், சோற்றுக் கற்றாழையும் ஒரேவகையைச்சார்ந்தவை. இவை இந்தியா முழுவதும் ஆற்றங்கரையிலும் சதுப்பு நிலங்களிலும்,புஞ்சை காடுகளிலும்,மலைப் பகுதிகளிலும் வளர்கிறது.

  • பொதுவாக கற்றாழையின் பயன்பாடு அனைத்து மருத்துவத்துறைகளிலும் உள்ளது.இவை என்றும் இளமைத்தோற்றத்தைத் தருவதால் இதனை குமரி என்றும்,கன்னி என்றும் அழைக் கின்றனர்.

  • தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுவதால் இதனை குமரி என்று அழைப்பதாக சிலர் கூறுகின்றனர்.

  • இந்த வகைக் கற்றாழைகளில் சிவப்புக் கற்றாழை கிடைப்பது மிகவும் அரிது. இதன் சிறப்புகள் பற்றி எல்லா சித்தர்களும் பாடியுள்ளனர். கற்றாழையின் மருத்துவக் குணங்கள் பற்றி தேரன் வெண்பாவில்

வற்றாக் குமரிதன்னை வற்றலென வுண்ணினுஞ்சீர்

முற்றாக் குமரியென மூளுமே - நற்றாக்குந்

திண்மையு மல்லாத் தெரிவையமே யானாலு

முண்மைமிகு நூறாமா யுள்

  • கற்றாழையை முறைப்படி உலர்த்தி வற்றலாக்கி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் நூற்றாண்டுக்கு மேல் வாழலாம்.

குமரியின் வற்றலும் கொளப்பிணி யகலும்

-தேரையர் குணபாடம்

  • கற்றாழையை வற்றலாக்கி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் என்றும் நம்மை அணுகாது.கற்றாழையை மேற்கண்டபடி கற்பம் செய்து சாப்பிட்டு  வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று.





விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line





==--==

Please Contact for Appointment