Friday, May 24, 2013

Dyspareunia - உடலுறவின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற வலிகள்






உடலுறவின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற வலிகள் குறித்து மருத்துவர் செந்தில் குமார் அவர்களுடன் ஓர் நேர்கானல்.

கேள்வி:- டிஸ்பரூனியா - Dyspareunia  என்றால் என்ன டாக்டர்?
பதில்:- உடலுறவின் போது பெண் உறுப்பிலே வலி ஏற்படுவது மருத்துவ ரீதியாக Dyspareunia எனப்படுகிறது.
உடலுறவு என்ற இனிமையான நிகழ்வின் போது , சில பெண்களுக்கு ஏற்படும் வலியினால் அவர்களின் குடும்ப வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்படுகிறது.

கேள்வி:- Dyspareunia ஏற்பட காரணம் என்ன டாக்டர்?
பதில்:- Dyspareunia ஏற்பட பல காரணங்கள் உண்டு. பொதுவாக இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

Superficial Dyspareunia அதாவது புணர்ச்சியின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிற வலி
  • பெண்ணுறுப்பில் போதிய உயவுத்தன்மை இல்லாமல் வரண்டிருத்தல்.
  • நிரந்தர மாதவிடாய் நிறுத்தத்தால் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் அளவு குறைதல்.
  • பெண்ணுறுப்பில் காயம், வீக்கம், அல்லது அறிப்பு.
  • பெண்ணுறுப்பு தசைகள் இறுக்கம் (Vaginismus).
  • பெண் உறுப்பில் ஏற்படும் நோய் தொற்றுக்கள்.
  • மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண் உறுப்பில் ஏற்படும் வரண்டதன்மை.
  • உளவியல் பிரச்சனைகள் .
  • சிறுநீர் குழாய் வாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கள்.

Deep Dyspareunia புணர்ச்சியின் உச்ச கட்டத்தில் ஏற்படுகின்ற வலிக்கான காரணங்கள்.
  • எண்டோமெட்ரியோஸிஸ், Endometriosis,
  • கருப்பை கட்டிகள் - Uterine fibroids,
  • சிறுநீர்ப்பை வீக்கம் – Cystitis,
  • சில அறுவை சிகிச்சைகள்

கேள்வி:- Dysparunia வலிக்கான மிக முக்கிய காரணம் என்ன டாக்டர்? இதிலிருந்து விடுபடுவது எப்படி?
பதில்:- உடலுறவில் ஈடுபடும் போது இருவரின் பிறப்பு உறுப்புகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களுக்கு ஆணுறுப்பு விறைப்படையும் , பெண்களுக்கு பெண்குறி உணர்ச்சி தூண்டப்படுவதோடு உறுப்பின் மற்ற பகுதிகளிலும் சில திரவங்கள் சுரக்கப்பட்டு பெண் உறுப்பை நெகிழவைக்கும். இந்த மாற்றங்கள் ஒரு பெண் உறுப்பில் ஏற்படாமல் இருக்கும் போது ஆண் புணர்ச்சியிலே ஈடுபட்டால் நெகிழ்வு தன்மையற்ற அந்த பெண் உறுப்பிலே வலி ஏற்படும். இதற்கு ஆண் மட்டுமே காரணம். அதாவது தன் துணை உடலுறவுக்குத் தயாரா என்று கவணிக்காமலேயே அவசரப்பட்டு புணர்ச்சியில் ஈடுபடுவது அந்த பெண்ணுக்கு வலியை ஏற்படுத்தும்.

எனவே புணர்ச்சியில் ஈடுபடும் போது ஆண்கள் தங்கள் மனைவி அதற்குத் தயாரா என்று அறிந்து கொண்டு ஈடுபட வேண்டும், அப்படி தயாராகாத போது எடுத்த எடுப்பிலே புணர்ச்சியில் ஈடுபடாமல் சற்று பொறுத்து முன்விளையாட்டுகள் மூலம் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை தயார் படுத்திய பின் புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு புணர்ச்சிக்கு முன்பு நடை பெறுகின்ற விஷயங்கள் Foreplay எனப்படுகிறது.

கேள்வி:- புணர்ச்சியின் போது வலி உண்டாக உளவியல் ரீதியான காரணங்கள் என்ன டாக்டர்?.
பதில்:- எதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக பலவந்தம் செய்யப் பட்ட பெண்களுக்கு சில நேரங்களில் உடலுறவு என்பது வாழ்க்கை முழுவது வலியானதாகவே அமைந்து விட வாய்ப்பு உண்டு. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணோஅல்லது ஆண் துணையின் மீது ஈடுபாடு இல்லாத பெண்ணோ உடலுறவில் ஈடுபடும் போது அவர்களின் பெண்ணுறுப்பு உடலுறவுக்கு உகந்த முறையில் நெகிழாமல் சுருங்கியபடியே இருக்க வாய்ப்பு உண்டு.

எனவே உடலுறவின் போது வலியிருந்தால் தயங்காமல் மருத்துவரை அனுகி ஆலோசனை செய்து வலிக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளுதல் மிக அவசியம்.

கேள்வி:- டிஸ்பரூனியாவுக்கு என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம், ஹோமியோபதியில் இதற்கு சிகிச்சை உண்டா டாக்டர்?
பதில்:- ஹோமியோபதி மருத்துவத்தில் நோயின் அறிகுறிகளுகேற்ப மிகச்சிறந்த சிகிச்சை உள்ளது. ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதின் மூலம் பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத பலனை பெறலாம். உளவியல் ரீதியான பாதிப்புகள் இருந்தால் அதை கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெராபி மூலம் சரிசெய்ய முடியும்.

கேள்வி:- டிஸ்பரூனியா நோய் சிகிச்சையில் உங்களின் மருத்துவ அனுபவங்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.
பதில்:- எனது பதினான்கு வருட மருத்துவ அனுபவத்தில் டிஸ்பரூனியாவால் பாதிக்கப்பட்ட பல பெண் நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் மற்றும் உளவியல் ஆலோசனை மூலம் சிகிச்சை அளித்துள்ளேன். நோயின் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகளை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கும்போது நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கேள்வி:- உங்களை எங்கே சந்திக்கலாம் டாக்டர்?
பதில்:- எங்களுடைய விவேகானந்தா கிளினிக் சென்னையிலும், பாண்டிச்சேரி மற்றும் பண்ருட்டியிலும் இருக்கிறது. 9786901830 என்ற கைபேசி எண்னை தொடர்புகொண்டு முன்பதிவு பெற்று என்னை சந்திக்கலாம்.


விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line





==--==


Please Contact for Appointment