Thursday, July 18, 2013

சுரம் – காய்ச்சல் - பீவர் - Fever






சுரம்காய்ச்சல்

Ø  சுரம்காய்ச்சல் குழந்தைகளுக்கு  அடிக்கடி  வரும் அன்றாட  நோய் ஆகும் .

Ø  சுரம்காய்ச்சல்  என்பதே ஒரு வியாதி அல்ல , ஒரு அறிகுறி  மட்டுமே .

Ø  எதனால்  காய்ச்சல் வந்துள்ளது  என  பார்த்து  மருந்து  தந்தால் மட்டுமே  ஜுரம் குறையும் .

Ø  உடல் வெப்பத்தை அளவிட இரண்டு அலகுகள் உள்ளன : செல்சியஸ்பாரன்ஹீட்

Ø  நமது   உடலின் சாதாரண வெப்பநிலை - 36.7-37.2* C     or   98-99* F

எனவே  நாம்  எந்த  அலகு கொண்டு  உடல்  வெப்பத்தை  அளவிடுகிறோம்  என்பதை  கவனிக்கவேண்டும் .

சராசரி  வெப்பம் --- 36.7-37.2* C   or    98-99*F
Ø  மித  ஜுரம்----37.2-37.8*C  or 99-100*F
Ø  ஜுரம்----37.8-39.4*C   or 100.-103*F
Ø  அதிக  ஜுரம்----39.4-40.5*C   or   103-105*F
Ø  விஷ ஜுரம் --->40.1*C      or   >106*F

தெர்மாமீட்டர் மூலம் சுரத்தை சோதனை செய்யும்  இடங்கள் : வாய்அக்குள்ஆசன வாய்

குழந்தைகளுக்கு   அக்குள்  மற்றும்  அசன வாயில் பார்ப்பதே  நல்லது .


சுரத்தை  குறைக்க  PARACETAMOL  சிறந்த  மருந்து. குழந்தையின்   எடைக்கு   ஏற்ப  தரவேண்டும் .  15mg/kg.

அதாவது    பத்து கிலோ  குழந்தைக்கு   150Mg  தரவேண்டும் . ஜுரம் குறையவில்லை   என்றால்  ஆறு  மணிக்கு  ஒரு முறை  தொடர்ந்து  இதே அளவு தர வேண்டும் .

சிரப்   மருந்துகள் -   இரண்டு  அளவுகளில்   சிரப்  வருகிறது .. 125 & 250ml

125mg என்றால்  5ml இல்   125mg  இருக்கும்

ஒருml  இல்    25mg    இருக்கும்

பத்து  கிலோ   குழந்தைக்கு   ஆறு மிலி   தரவேண்டும்

250mg  என்றால்    5ml  இல்  250mg  இருக்கும்.

ஒரு ml இல்    50mg இருக்கும் . பத்து  கிலோ குழந்தைக்கு    மூன்று   மிலி   தரவேண்டும் .

மாத்திரை  அளவுகள் :   125, 250, 325, 500, 650, 750, 1000mg  ஆகிய அளவுகளில்  கிடைக்கும் .

ü  8 கிலோ  குழந்தைக்கு   125mg  ஒரு மாத்திரை  ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்

ü  15 கிலோ குழந்தைக்கு  250mg  ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்

ü  20 கிலோ குழந்தைக்கு 325mg ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்


ü  30கிலோ குழந்தைக்கு 500mg ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்.

இது முதலுதவிக்காக மட்டுமே,

காய்ச்சல் குறையவில்லையென்றால் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று தகுந்த காரணத்தை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது நலம்.

ü  சிறு குழந்தைகளுக்கு  சுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் இருக்கும். இது உடலில் உள்ள  நீர் சத்தை குறைத்துவிடும். இது மேலும்  உடல் வெப்பத்தை  அதிகரிக்கும் .

ü  அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழச்சாறு

ü  காற்றோட்டம் உள்ள பருத்தியாலான  உடையை மட்டுமே போடவேண்டும். முடிந்தால் டயாபரை  கூட கழட்டிவிடுவது நல்லது .

ü  ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது. ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது கூடாது. இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு .

ü  ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும் !

சரி ஸ்வட்டர்  எப்போது போடலாம் :

v  எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தலாம்.

v  பயணம் செய்யும்போது ,குளிர்ப்ரதேசங்களுக்கு  செல்லும்போது ,

v  இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது.



FEBRILE FITS - சுர வலிப்பு
இது ஆறுமாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் தாக்கும் . சுரம் அதிகமாக வரும் போது சில குழந்தைகள் பேச்சுமூச்சு இன்றி ,கண்கள் மேலே சொறுகி, வாயில் நுரைதள்ளி , கைகால்கள் வெட்டி வெட்டி இழுக்கும். இது ஐந்து முதல் பத்துநிமிடம் வரை இருக்கும் . பின் வலிப்பு நின்றுவிடும். சிறிது நேரம் சுயநினைவு இல்லாமல் இருக்கும் . பிறகு சாதரணநிலைக்கு வரும். இது எப்பொழுது சுரம் அதிகம் வந்தாலும் வரும் .

முதலுதவி :
ü  பதற்றம் அடையகூடாது
ü  காற்றோட்டம் வரும்படி குழந்தையை படுக்க வைக்கவும்.
ü  ஒருக்களித்து படுக்க வைக்கவும்
ü  வாயில் உள்ள நுரை மற்றும் எச்சிலை துடைக்கவும்
ü  உடைகளை அகற்றவும் .
ü  தலை முதல் கால் வரை ஈரமான துணி கொண்டு துடைத்து விடவும் . இது மிக முக்கியம் . மீண்டும் மீண்டும் இது போல் சுரம் குறையும் வரை செய்யவும்.
ü  வரும் முன் காப்பதே சிறப்பு .
ü  சுரம் வந்தவுடன் முன் எச்சரிக்கையாக தண்ணீர் வைத்து துடைத்து விடுவது நலம் .
ü  இதற்கு சாதாரண குழாய் தண்ணீரை பயன் படுத்தவேண்டும் .
ü  சுடு நீர் அல்லது குளிர் நீர் கூடாது .


Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Pondicherry:- 9865212055
Panruti:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line

For appointment please Call us or Mail Us








==--==

Please Contact for Appointment