Friday, July 19, 2013

ஒற்றை தலைவலி - ஹோமியோபதி மருத்துவமனை, வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு,
முக்கியமான மூன்று தலைவலிகள்

மைக்ரேன் - ஒற்றைத் தலைவலி
இது பெண்களை அதிகம் தாக்கும் என்பதால் இதைபெண்களுக்கான தலைவலிஎன்று சொல்லலாம்.
Ø  மன அழுத்தம்,
Ø  சேராத உணவுப் பொருட்கள்,
Ø  அதிக வெளிச்சம்,
Ø  தூக்கம் இன்மை அல்லது அதிகத் தூக்கம்,
Ø  சாப்பிடாமல் இருப்பது,
Ø  தலையில் காயம்படுதல்
போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும்.

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகமாகும். அதுவே, மெனோபஸ் காலத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி குறைந்துவிடும். ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பித்துவிடும்.

ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன்,
ü  கண் பார்வை மங்குவது,
ü  கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது,
ü  வாந்தி வரும் உணர்வு.
ü  கண்ணில் பளிச்சென்று லைட் எரிவது போன்ற வெளிச்சம் தோன்றி தலைவலி அதிகமாக ஆரம்பிக்கும்.
போன்ற அறிகுறிகள் தென்படும்.


க்ளஸ்டர் தலைவலி
இதைஆண்கள் தலைவலிஎன்று சொல்லலாம்.
குடிப் பழக்கம் உள்ளவர்களும் உடல் பருமனானவர்களும் இந்தத் தலைவலிக்கு எளிதில் ஆட்படுவார்கள். தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்துபோகும். இன்று காலை 10 மணிக்கு வந்தால், நாளை காலை 10 மணிக்கு வரும். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குக்கூட நீடிக்கலாம். பிறகு, சரியாகி மீண்டும் 10 வருடங்கள் கழித்து கூட திரும்ப வரலாம்.

டென்ஷன் தலைவலி
இன்றைய அவசரமான எந்திரமயமான வாழ்க்கையில் நிறைய பேருக்கு  வரும் தலைவலி இது. பொருளாதார சூழல். குடும்ப பிரச்சினை, அலுவலக டென்ஷன் முதலியவை முக்கிய காரணம். டென்ஷனைக் குறைத்தால், இந்தத் தலைவலி குறையும்.


மைக்ரேன் தலைவலி
எப்படி வரும்
Ø  வெகு அரிதாக சிலருக்குத் தான் தினமும் வரும்.
Ø  சிலருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரலாம்.
Ø  சிலருக்கு மாதத்துக்கு நான்கு முறை வரலாம்.
Ø  இப்படி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தான் இந்த "மைக்ரேன்(Migraine)" தலைவலி வரும்.
Ø  தனக்கு எந்த மாதிரியான வலி இருக்கிறது" என்று சொல்லவே முடியாமல் தவிப்பர். தலையை பிளப்பது போல வலி இருக்கும்.
Ø  ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கும்.
Ø  சிலருக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் இடத்தில் வரும்.
Ø  சிலருக்கு மைக்ரேன் தலைவலி வந்தால், மணிக்கணக்கில், நாட்கணக்கில் நீடிக்கும். சிலருக்கு கண்களில் கருவளையம் கட்டி, கண் பார்வையும் கூட பாதிக்கப்படும். எதைப்பார்த்தாலும், ஒரு வித எரிச்சல் ஏற்படும். அதனால், அவர்கள் கண்களை மூடிக்கொண்டே இருக்கவே விரும்புவர். அப்படியிருந்தால் நிம்மதியாக இருப்பதாக நினைப்பர்.

தலைவலி வரும்போதே, , வாந்தி, மயக்கம் என்று வித்தியாசமாக உணர்ந்தால் டாக்டரை பார்ப்பது மிக நல்லது.

ü  கடுமையாக வரும் தலைவலிகள் எல்லாம் மைக்ரேன் தலைவலி அல்ல.
ü  அதுபோல, மிதமான தலைவலி என்பது பொதுவான தலைவலி என்றும் கொள்ள முடியாது. அது மைக்ரேனாகவும் இருக்கலாம். அதனால், மைக்ரேன் என்று தெரிந்ததும், அசட்டையாக இருக்க வேண்டாம்
ü  ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் மைக்ரேன் வரும்.
ü  பெண்களுக்கு அவர்களுக்கே உரிய மாதவிடாய் பிரச்சனைகளால் வரும்.
ü  அசாதரணமான ஒளி,
ü  அலர்ஜியான சத்தம்,
ü  சாக்லெட் ,ஐஸ்கிரீம் போன்ற சில வகை உணவுகள் ஆகியவை  மைக்ரேன் அதிகமாக  காரணமாக இருக்கலாம்இதை சாப்பிடுவோர்  அனைவருக்கும் தலைவலி வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு தான் வரும்.

அறிகுறிகள்.
v  பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும்.
v  சிலருக்கு இரு பக்கமும் வலி ஏற்படும்.
v  எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.
v  கண்களை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்று எண்ணத்தோன்றும்.
v  வாந்தி வருவது போல இருக்கும். சிலர் வாந்தி எடுப்பார்கள், வாந்தி எடுத்தால் சிலருக்கு வலி குறையும். சிலருக்கு வலி குறையாது.
v  மன அழுத்தம் இருந்தால் மைக்ரேன் தலைவலி அதிகமாகும்.
v  அடிக்கடி வந்தால் தலைவலி வந்தால் அது மைக்ரேனாக இருக்கலாம்.
v  சிகரெட் பிடிப்போர், அடிக்கடி கருத்தடை மாத்திரை விழுங்குவோர், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதவர்களுக்கு கூட இந்த தலைவலி வரலாம்.
v  அதிக சத்தத்துடன் இயர் போனில் பாடல் கேட்பது,
v  செல்போனில் அதிக நேரம் பேசுவது.
v  டி.வி யில் அதிக ஒலியுடன், அதிக கலர் வைத்து பார்ப்பது போன்றவையும் மைக்ரேன் வர காரணமாக இருக்கலாம்.
v  சிலருக்கு சில வாசனைகளால் கூட மைக்ரேன் வரும். சிலரை பார்த்தாலோ, எந்தவித வாசனையாவது முகர்ந்தாலோ, காற்றில் வந்ததை சுவாசித்தாலோ, அவர்களுக்கு லேசாக தலைவலி வரும்.
v  அவர்கள் ஆரம்பத்திலேயே தங்களுக்கு அலர்ஜியான விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

வந்து விட்டால்...
மைக்ரேன்(Migraine) என்று வந்துவிட்டால், அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. மற்ற தலைவலி போல நினைத்து, கண்ட கண்ட மருந்துகளை கடைகளில் வாங்கி சாப்பிட கூடாது.
தகுந்த மருத்துவரிடம் காட்டி, ஆலோசனை பெற்று, தலைவலி மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அப்படியிருந்தால், தலைவலி வீரியம் குறையும். சத்தம் இல்லாத, வெளிச்சம் வராத இருட்டறையில் ஓய்வு எடுப்பதும் தலைவலி கடுமையை குறைக்கும்.
பெண்களுக்கு, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் வந்தால், அவர்கள், தங்கள் உணவில் உப்பை குறைத்துக்கொள்வது நல்லது. அதுபோல, ஆண்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றால், அதை விடுவது நில்லது.
சிலருக்கு ஸ்ட்ரெஸ்(Stress) என்று சொல்லப்படும் மன அழுத்தத்தால் கூட வரும். அதை தவிர்க்க, அவர்கள் யோகா(Yoga) , தியானம் என்று பயிற்சி செய்யலாம். சிறிய அளவில் வாக்கிங் போகலாம்.

சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. முறையாக சிகிச்சை மேற்கொண்டால் தலைவலியிலிருந்து விடுதலை பெறுவது உறுதி.


உங்களுக்கு ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் ஹோமியோபதி மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகர் மருத்துவர் செந்தில் குமார் அவர்களை தயக்கமின்றி தொடர்புகொண்டு சிகிச்சை பெறவும்.

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line

==--==

Please Contact for Appointment