Saturday, July 20, 2013

மெட்ராஸ் ஐ - Madras Eye - விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் வேளச்சேரி, சென்னை.








மெட்ராஸ் - குறித்த  தகவல்கள் :
கண்களின்  வெளி சவ்வு  அழற்சி  - சிவந்த  கண் அல்லது  மெட்ராஸ் (Madras Eye) எனபடுகிறது .

அடினோ  வைரஸ் (ADENO VIRUS - CONJUNCTIVITIS) என்ற வைரஸ் இதற்கு  பெரும்பாலும் காரணம் .
Ø  இது பருவநிலை  மாறுபாடல் வரும் ஒரு வியாதி.
Ø  இந்த வைரஸ் சூடான, ஈரபதமான சூழ்நிலையில்  மிக வேகமாக  பரவக்கூடியது.
Ø  இது காற்று, கர்சிப், துண்டு, பேனா, பென்சில், அழிப்பான், பேப்பர்  கை குலுக்குதல்  மூலம் பரவும்  ஒரு வைரஸ்  வியாதி  ஆகும் .
Ø  கருப்பு  கண்ணாடி போடுவதால்  பிறருக்கு  பரவாது என்பது  தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான  சூரிய வெளிச்சம் மூலம்  வரும்  எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .
Ø  ஒருவர் பயன்படுத்திய  கண்ணாடியை  மற்றவர் பயன்படுத்த கூடாது
Ø  கண் சொட்டு  மருந்தை  ஒரு நாளைக்கு  ஆறு முதல்  எட்டு  முறை  மருத்துவர் ஆலோசனை படி  போடவேண்டும் .
Ø  கண்களை கசக்க  கூடாது .
Ø  தும்மல், இருமல் மூலமும் இந்த  வைரஸ் பரவும், எனவே வாயில் துணி  வைத்து இருமவும் .
Ø  கண்களை  குளிர்ந்த நீரில்  அடிக்கடி கழுவவும், அதற்கு முன்பு கைகளை  நன்கு சோப்பு போட்டு  கழுவவும் .
Ø  மிதமான  வெந்நீரில்  துண்டை  நனைத்து  ஒத்தடம் கொடுக்கவும் .
Ø  நேருக்கு  நேர் பார்த்தால் நோய் வராது. ஆனால்  எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும்   , குழந்தைகளுக்கும்   அருகில் வந்தாலே மூச்சு  காற்று மூலம்  தொற்று  ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி  Steroid  சொட்டு  மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம். எனவே  சுய  மருத்துவம்  செய்வதற்கு  சும்மா இருப்பதே மேல். ஏனெனில்  இது தானாகவே  சரி ஆகிவிடும்  (self limiting).

உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்துமுதல்நாட்களில்  இது குணமடையும்.

ஹோமியோபதியில் யூபரேசியா கண் சொட்டு மருந்து விரைவான பலன் தரும். மருத்துவரின் ஆலோசனையின் படியே இந்த மருந்தையும் உபயோகிக்க வேண்டும்.





விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line







==--==

Please Contact for Appointment