Saturday, July 20, 2013

முதல் முறையாக உடலுறவு - Pregnant after First Intercourse









முதல் முறையாக  உடலுறவு  கொண்டால் கர்பமடைய வாய்ப்பில்லையா?

கேள்வி: டாக்டர்என் பெயர்  _______, வயது இருபது, நானும் என் காதலனும் நேற்று செக்ஸ் செய்தோம். அவர் காண்டம் ஏதும் போடவில்லை. விந்து  உள்ளே சென்றுவிட்டது. என் நண்பர்கள் எல்லோரும்இது பர்ஸ்ட் டைம் என்பதால் நான் கர்ப்பம் ஆக மாட்டேன் என்று சொல்கிறார்கள். நான் கர்ப்பம் ஆகிடுவேனாப்ளீஸ், இப்போ நான் கர்ப்பம் ஆகாமல் எப்படி தடுப்பதுஅவசரம் டாக்டர்தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.

பதில்: கவலை வேண்டாம். இதற்காக இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்துகடைகளில் கிடைக்கிறது. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள்.

இந்தியாவில் இந்த மாத்திரைகள்  IPil  என்ற பெயரில் விற்கப்படுகிறது.
நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருத்தறிக்க முடியாமல் செய்து விடும்.

இந்த மாத்திரைகளில் (Progestin and Oestrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருத்தறிக்க தேவையான உடல்நிலையை மாற்றி விடும். அதே போல இந்த மாத்திரைகள் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களிடம் இருந்து உங்களை பாதுகாக்காது. இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்தில் நீங்கள் வாந்தி எடுத்தால், இன்னொரு மாத்திரையை கூட சாப்பிட வேண்டும்.

பக்க விளைவுகள்:
ü  வயிற்று வலி
ü  மயக்கம்
ü  வாந்தி
ü  கை கால் குடைச்சல்
ü  மார்ப்பகம் மென்மையாதல்
ü  மாதவிலக்கு தற்காலிகமாக தடைப்படுதல்
ü  பார்வை மங்குதல்
மேலே சொன்ன பக்க விளைவுகள் அதிகமாக இருந்தால், உடனே, மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் முதல் முறை உடலுறவு கொள்வதால் கர்ப்பம் ஆக மாட்டீர்கள் என்று உங்கள் நண்பர்கள் சொன்னதாக சொன்னீர்கள். இது தவறான கருத்து. முதல் முறை உடலுறவு கொண்டாலும் கருத்தறிக்க வாய்ப்பு உண்டு.
இந்த மாத்திரைகள் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பயனளிக்கும். ஒரு வேளைஅடுத்த நான்கு வாரத்தில் மாத விலக்கு இல்லை என்றால், கர்ப்பத்துக்காக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இதே போல் இந்த மாத்திரைகள் அவசரத்துக்காக மட்டும் உபயோகப் படுத்துங்கள். மற்றபடி பாதுகாப்பான உடலுறவுக்கு, ஆணுறை போன்ற மற்ற கருத்தடை சாதங்களை பயன்படுத்துங்கள்.






விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line










==--==

Please Contact for Appointment