Saturday, August 31, 2013

பொன்னாங்கண்ணி







பொன்னாங்கண்ணி
மேனியை பொன் போல் ஆக்கும் தன்மை கொண்டதால் இதனை பொன்னாங்கண்ணி என்று அழைக்கின்றனர் . பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்காணி என்றே சித்தர்கள் இதனை விளக்குகின்றனர். இதனை தங்கக் கீரை என்றும்அழைக்கின்றனர்.

பொன்னாங்கண்ணியில் இருவகைகள் உள்ளன.
ü  நாட்டு பொன்னாங்கண்ணி,
ü  சீமை பொன்னாங்கண்ணி.

இதுபடர்பூண்டு வகையைச்சார்ந்தது. இந்தியா முழுவதும் வயல் வரப்புகளிலும், தோட்டங்களிலும் பரந்து காணப்படும். இதை காயகல்ப பூண்டு என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.

பொன்னாங்கண்ணி கற்பம்

பொன்னாங்கணிக் கீரை போற்றியுணக் கற்பமுறை

பொன்னாங்கணிக் கீரை போதுமோ-பொன்னா

யிருப்தி லக்கமதி யேற்பத் தியத்தை

யிருப்தி லக்க மதியே

- தேரையர் குணபாடம்

பொருள் - செழிப்பாக வளர்ந்த பொன்னாங்கண்ணி இலையை சுத்தம் செய்து நெய்விட்டு நன்கு வதக்கி அதனுடன் மிளகு உப்பு சேர்த்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு கற்பமுறைப்படி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள்காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ,

v  உடலுக்கு வன்மையை உண்டாக்கும்.

v  மேனி பொன்னிறமாக மாறும்.

v  நோயில்லா  நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

v  கண்கள் குளிர்ச்சியடைந்து பார்வை தெளிவுபெறும்.

v  இக்கற்பமருந்தை உட்கொள்ளும் காலங்களில் உணவில் புளியைத்தவிர்க்க வேண்டும்.

v  பொன்னாங்கண்ணிக் கீரையை தினமும் உண்டு வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தடுத்து, நோயின் தாக்கத்தைக்குறைக்கும்.

v  மேலும் கண் புகைச்சல், ஈரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப் படுத்தும்.


விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்









==--==

Please Contact for Appointment