Wednesday, September 4, 2013

வயிறு கோளாறுகள் Stomach Problems - Gas Problems - சிறப்பு சிகிச்சை

ஏப்பம் - வயிற்றுப்பொருமல் - வாயு
ஏப்பமும், வாயுவெளியேற்றமும் இயற்கையாக நடைபெறும் சாதாரண விஷயங்களே. இவை ஒரே நாளில் பலதடவைகள் கூட நடக்கலாம். ஆனால் அளவுக்கதிகமான ஏப்பம், வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை (Belching, Bloating or Gas) ஆகியன அசௌகரியத்தையும், அலுவல் உள்ள வேளைகளில் தடுமாற்றத்தையும் உண்டாக்க கூடும்..

ஏப்பம் (Belching) என்பது என்ன?
ஏப்பம் என்பது இரைப்பையிலுள்ள அதிகமான காற்றை வெளியேற்ற உடல் செய்கின்ற ஒரு செயலாகும். நீங்கள் மிகவிரைவாக உணவை அல்லது நீரை உட்கொண்டாலோ அல்லது பேசிக்கொண்டே சாப்பிட்டாலோ அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறீர்கள். கேஸ் டிரிங்ஸ் (Carbonated Beverages) குடிப்பதாலும் ஏப்பம் வரலாம்.

இரைப்பையிலிருந்து அமிலம் மேல் வருவது (Acid reflux) அல்லது இரைப்பையிலிருந்து உணவுக்குழாய்க்குள் உணவு மீண்டும் மேல்வருவது போன்ற கோளாறுகள் உள்ளவர்களுக்கும் (Gastro Esophageal Reflux Disease- GERD) இந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இரைப்பையிலுள்ள அமிலம் மேல் நோக்கி உணவுக்குழாய்க்குள் வரும்போது அதை உள்ளே தள்ளுவதற்காக மீண்டும் மீண்டும் விழுங்க வேண்டியிருக்கிறது. இதனால் கூடுதலான காற்றும் உள்ளே விழுங்கப்படுகிறது. இது மேலும் மேலும் ஏப்பம் வர காரணமாகிறது.

ஒரு சிலர் வெறும் காற்றை விழுங்குவதை பழக்கமாக பழகிவிடுகின்றனர். உணவோ, பானங்களோ, சாப்பிடாத வேளைகளில் கூட. வேறு சிலரில் இரைப்பையின் உட்பக்கத்தில் ஏற்படுகின்ற அழற்சி (Gastritis) ஏப்பத்தை உண்டாக்குகிறது.

ஏப்பத்தை குறைக்க பின்வரும் செயல்கள் பலனலிக்கும்.
ü  மெதுவாக உண்ணுதல், பருகுதல்மெதுவாக உண்பதால் நீங்கள் காற்றை விழுங்குவது மிகவும் குறையும்.

ü  கார்பனேட்டட் பானங்களையும், பியரையும் தவிர்க்கவும் - இவை கார்பன் வாயுவை வெளியேற்றுகின்றன.

ü  புகைத்தலை தவிருங்கள் - புகையை உள்ளிழுக்கும் வேளையில் நீங்கள் காற்றையும் விழுங்குகிறீர்கள்.

ü  நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து சாப்பிடுங்கள். எப்போதாவது உங்களுக்கு ஏற்படுகின்ற இலேசான நெஞ்சு எரிச்சலை சரிசெய்வதற்கு மருந்துக்கடைகளில் கேட்டுவாங்கக்கூடிய அமில நிவாரணிகள் பலனலிக்கும். ஆனால் ஏப்பம் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

வயிற்றுப் பொருமல் - வயிறு உப்பிசம்- Bloating ,
இரைப்பையிலும் குடலிலும் வாயுக்கள் சேர்வதால் ஏற்படுவதே வயிற்றுப் பொருமல் ஆகும். அநேகமாக இது வயிற்று வலியுடன் சேர்ந்தே உண்டாகும் - இலேசான, மந்தமான வலியாகவோ அல்லது தீவிரமான, மிக வருத்துகின்ற வலியாகவோ இந்த வயிற்றுவலி இருக்கலாம். வாயு வெளியேறுவதாலோ அல்லது மலங்கழிப்பதாலோ இவ்வலி இல்லாமல் போகலாம். வயிறு உப்புசம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகள்தான். கொழுப்புணவுகள் இரைப்பையை விட்டுச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் வயிறு நிரம்பியிருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

வயிற்றுப் பொருமல் பின்வரும் காரணங்களால் கூட ஏற்படலாம்.
Ø  மனச்சுமை அல்லது மனஉளைச்சல் (Stress or Anxiety)

Ø  வயிற்றில் ஏற்படும் தொற்று நோய் அல்லது அடைப்பு

Ø  வயிறு மற்றும் குடலின் வேலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் சில மனம் சார்ந்த வயிற்றுப்போக்கு போன்ற மாற்றங்களை காண்பிக்கின்ற ஒரு குடல் நோய் இரிடபுள் பவல் சின்ரோம் - Irritable Bowel Syndrome - IBS

Ø  சில உணவு பதார்த்தங்களை செரிக்காமல் செய்யவும், அதன் சத்துக்களை உடலுள்ளே எடுத்துக் கொள்ளவும் முடியாதபடி செய்யும் குடலோடு சம்பந்தப்பட்ட சில கோளாறுகள் (Coeliac disease or Lactose intolerance)

வயிற்றுப் பொருமலை குறைத்துக் கொள்வதற்கு கொழுப்புக்கூடிய உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் வாயுக்களை உற்பத்தியாக்குகின்ற பின்வரும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ü  புறோகோலி (Broccoli)
ü  வேகவைத்த அவரை விதைகள் (Backed beans)
ü  முட்டைக்கோஸ் (Cabbage)
ü  காளிபிளவர் (Cauliflower)
ü  பச்சைக் காய்கறிகள் (Salads)
ü  கார்பனேட்டட் பானங்கள் (Carbonated drinks)

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன?
செரிமானமாகாத உணவு பெருங்குடலில் நொதிப்பதனாலேயே குடல் பகுதிகளில் வாயு உண்டாகிறதுஉதாரணமாக தாவர உணவுகளிலுள்ள நார்ப் பொருட்கள் இவ்வாறு நொதிப்படைகின்றன. அதேபோல பால்பொருட்கள், வெல்லங்கள், சில பழங்கள், குடலில் செரிமானமாகாமல்  இறுதியில் வாயுக்களை உண்டுபண்ணுகின்றன.

வாயு உண்டாவதற்கான வேறும் சில காரணங்கள்-
Ø  பெருங்குடலை வந்தடைகின்ற செரிமானமாகாத உணவின் எஞ்சிய பகுதிகள் காரணமாகலாம்.

Ø  விழுங்கும்போது உள்ளே செல்லும் காற்றின் ஒருபகுதி பெருங்குடலை வந்தடையலாம்.

Ø  மலச்சிக்கல் செரிமானமாகாத உணவுகள் எவ்வளவு நேரம் குடலில் தங்கி நிற்கிறதோ அதேயளவுக்கு நொதிப்படைய இடமுண்டு).

Ø  சில சந்தர்ப்பங்களில் வாயுத்தொல்லையானது வயிற்றுப்பகுதியில் ஒரு சில நோய்கள் இருப்பதன் அறிகுறியாயிருக்கலாம். (Irritable bowel syndrome or Coeliac disease)

வாயுத்தொல்லையை தவிர்த்துக்கொள்வதற்கு பின்வரும் குறிப்புகள் பலனலிக்கலாம்.
ü  உங்களுக்கு அதிகம் பிரச்சினை கொடுக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அவரை, பட்டாணி, பருப்புவகைகள், முட்டைக்கோஸ், வெங்காயம், புறோகோலி, காலிபிளவர், வாழைப்பழம், முந்திரி, கைவற்றல், தீட்டப்படாத கோதுமை மாவு, பச்சைக் காய்கறிகள், கார்பனேட்டட் பானங்கள். (Beans, Peas, Lentils, Carbbage, Onions, Broccli, Cauliflower, Bananas, Raisins, Whole-wheat bread, Salads and Carbonated drinks) பால் பொருட்கள் சாப்பிடுவதால் பிரச்சினைகள் ஏற்பட்டால் லாக்டோஸ் குறைக்கப்பட்ட அல்லது லாக்டோஸ் நீக்கப்பட்ட பால் பொருட்களை சாப்பிடலாம்.
ü  குறைந்த அளவு கொழுப்புணவுகளை உட்கொள்ளுங்கள். – கொழுப்பு செரிமானத்தை தாமதப்படுத்துவதால் உணவு நொதிப்படைந்து வாயுக்களை உண்டாக்குவதற்கு அதிக அவகாசம் கிடைக்கிறது.
ü  அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுப்பதை தற்காலிகமாக குறைத்துக்கொள்ளுங்கள். – நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. அதேசமயம் அதிக நார்ச்சத்துள்ள உணவுவகைகள் ஏராளமான வாயுவை உண்டுபண்ணுபவைகளாகவும் உள்ளன. எனவே தற்காலிகமாக இடைவெளிவிட்டு, பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ü  மெதுவாக உண்ணுங்கள் - உணவு வேளையை ஒரு பரபரப்பில்லாத நிதானமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவசரமாக சாப்பிடுவதும், நெருக்கடியான நேரங்களில் சாப்பிடுவதும் செரிமானத்தை பாதிக்கக்கூடியவை.
ü  நடைபயிற்சி - உணவிற்கு பின் சற்று நடப்பது நல்லது.

எப்போது நீங்கள் மருத்துவரை நாடவேண்டும்?
ஏப்பம், வயிற்றுப் பொருமல், வாயு என்பன சில நேரங்களில் அளவுக்கதிகமாக ஏற்படலாம். இவை அனேகமாக தானாகவே சரியாகிவிடும். உங்களுடைய உணவு விஷயங்களில் சிலவற்றை மாற்றியும் இந்த தொந்தரவுகள் சரியாகவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை பார்ப்பது நல்லது. அத்துடன் பின்வரும் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் போவது நல்லது.
Ø  வயிறுப்போக்கு
Ø  மலச்சிக்கல்
Ø  வாந்தி
Ø  வயிற்று வலி அல்லது ஆசனவாயிலில் வலி
Ø  இடைவிடாத நெஞ்சு எரிச்சல்

சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் மேலே சொன்ன அறிகுறிகளுக்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. நோயின் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி உட்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168

9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==

Please Contact for Appointment