Thursday, October 31, 2013

முடி இப்பவே நரைக்கிறது, இது எதனால்? pre mature hair grayness












கேள்வி: எனக்கு 20 வயதாகிறது, என் முடி இப்பவே நரைக்கிறது, இது எதனால்? What is the reason for premature grayness

மருத்துவர் பதில்: முடி உற்பத்தியில் கரோடினின் முக்கியபங்கு வகிக்கிறது. நமது முடியில் உள்ள கரோடினுக்கு கருப்பு நிறத்தை கொடுப்பது மெலானின் என்ற நிறம் கொடுக்கும் நிறமி பொருள். இது தோலின் டெர்மிஸ் பகுதியில் உள்ள செல்களில் இருக்கும்.

வெயில் தோலில் பட்டால் மெலானின் உற்பத்தி அதிகமாகும். வயதாகும்போது இந்த மெலானின் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால் முடியில் கருப்பு நிறம் குறைந்து, முடி நரைத்து வெள்ளையாகிறது.

வயதாகி தலைமுடி நரைப்பது என்பது இயல்பு ஆனால் சிலருக்கு இளம்வயதிலேயே தலைமுடி நரைத்துவிடுகிறது. இதைதான் இளநரை என்கிறோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை ஒரு காரணியாகும்.

பெற்றோருக்கு இளநரை ஏற்பட்டிருந்தால், குழந்தைகளுக்கும் இளநரை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதை தவிர மனஅழுத்தம், ,கவலை, கோபம், சோகம் போன்ற மனம் தொடர்பானவை இளநரை ஏற்படுவதை அதிகப்படுத்தும்.

தலைமுடிகருகருவென முளைக்க வேண்டுமானால், மெலனின் எனும் நிறமிப்பொருள் சரியான அளவில் நம் உடலில் உற்பத்தியாக வேண்டும். இதற்கு புரதசத்து, கால்சியம் சத்து, வைட்டமின் - B5 போன்றவை தேவை.

ஆகவே, இளமையில் சத்துக்குறைபாடு ஏற்படுமானால், தலைமுடி நரைத்துவிடும். இளநரை ஏற்படுவதை தவிர்க்க பால், பருப்பு, முளைகட்டிய பயறுகள், பச்சைநிற காய்கறிகள் சாப்பிடுவதை அதிகப்படுத்துங்கள்.


தலைக்கு தினமும் மசாஜ் கொடுங்கள். நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள். இவை அனைத்தும் செய்து பலன் அளிக்கவில்லை எனில் மருத்துவரை ஆலோசித்து பயன் பெறுவது நல்லது.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்






--==--

Please Contact for Appointment