Friday, November 1, 2013

முடி உதிர்வதை தடுக்க அறிவுரைகள் - Hair loss prevention Medical tips







கேள்வி: முடி உதிர்வதை தடுக்க மருத்துவ ரீதியான அறிவுரைகள் என்ன டாக்டர்? How can we prevent hair falling medical tips,

மருத்துவர் பதில்:  மிதமான ஷாம்புவால் (Mild Shampoos) சீரான இடைவெளியில் முடியை கழுவவும்,

சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும் கூந்தலும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி உதிர்தல் குறையும். இது நோய் தொற்று மற்றும் பொடுகு பிரச்சினைகளில் இருந்தும் தலையை காப்பாற்றுவதால், முடி உடைதலும், கொட்டுவதும் கணிசமான அளவு குறையும். இது போக சுத்தமான தலை முடி தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்கும்.

முடி கொட்டுதலை தடுக்க வைட்டமின்களின் பங்களிப்பு. வைட்டமின்கள் உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் `' (Vitamin A) தலையில் உள்ள முடி வேர்கால் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் `' (Vitamin E), தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவும். வைட்டமின் `பி'(Vitamin B), முடியின் நிறத்தை பேணுவதற்கு பயன்படும்.

ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகள் கொழுப்பில்லா இறைச்சி, மீன்கள் மற்றும் இதர புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணுவதால் முடி உதிர்தல் குறையும்.

சில பிரத்யோக  எண்ணெய்களை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தல் பல காலமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், தலைக்கு பிரத்யோக எண்ணெய்களை கொண்டு சில நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இது முடி வேர்கால் சுரப்பிகள் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

ஈர முடியை சீவ வேண்டாம். முடி ஈரத்துடன் இருக்கும் போது, வலுவிழந்த நிலையில் இருக்கும். அதனால் ஈர முடியை சீவ முயற்சித்தால் முடி கொட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் ஈரத்துடன் இருக்கும் போதே முடியை சீவ வேண்டுமானால், அகன்ற பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தவும்.

முடியை அடிக்கடி சீவுவதையும் நிறுத்த வேண்டும். இது முடியை சேதப்படுத்தி கொட்டவும் செய்யும். முடிந்த வரை முடியில் ஏற்படும் சிக்கல்களை கைகளைக் கொண்டே எடுங்கள்.

உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.

சடை முடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். தலைமுடி தண்டில் நான்கில் ஒரு பகுதி தண்ணீர் உள்ளது. அதனால் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இது வளமான முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

தலைமுடிக்கு எது கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும். முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முடியை துண்டை வைத்து துவட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதில் முடியை இயற்கையாகவே காய விட வேண்டும்.

மதுபான வகைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முடி கொட்டுவதை உணர்ந்தீர்கள் என்றால், மது பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மது, முடி வளர்ச்சிக்கு தடை போடும். அதனால் குடி பழக்கத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, தலை முடி வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும். புகைப் பிடித்தால், தலைச் சருமத்திற்கு செல்லும் இரத்த அளவு குறையும். இது முடி வளர்ச்சிக்கு தடையாக நிற்கும்.

உடற்பயிற்சியில் ஈடு படவும். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிர்சியில் ஈடுபட வேண்டும். நடை, நீச்சல் அல்லது பைக் ஓட்டுதல் போன்றவற்றை தினமும் 30 நிமிடங்கள் செய்தால், அது உடலில் ஹார்மோன் அளவை சீராக்கி, மன அழுத்தத்தை குறைத்து, முடி கொட்டுதலையும் குறைக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கவும். மன அழுத்தத்திற்கும், முடி கொட்டுதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என்று மருத்துவ சான்றுகளோடு பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தை வளர விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தியானம் கைகொடுக்கிறது. தியானத்தையும், யோகாசனத்தையும் ஒழுங்காக செய்தால், அது ஹார்மோன் அளவையும் சீராக வைத்திருக்கும்.

ஹேர் ட்ரையரை தவிர்க்கவும். முடியை கருவிகள் மூலம் அடிக்கடி உலர்த்தவோ அல்லது சூடாக்கவோ முயற் சிக்க கூடாது. அடிக்கடி அப்படிச் செய்தால், முடியில் உள்ள புரதச்சத்து வலுவிழந்து போகும். முடியின் சத்தும் குறைந்து, முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும்.

தலையில் வியர்வை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவும்.

எண்ணெய் பசையுடன் கூடிய முடியை கொண்ட ஆண்களுக்கு, கோடைக்காலத்தில் வியர்வை உண்டாவதால் பொடுகு அதிகரிக்கும். இதுவே முடி கொட்டவும் காரணமாக அமையும்.

தொப்பி (Cap) மற்றும் ஹெல்மெட்(Helmet) அணிவதாலும், ஆண்களுக்கு முடி கொட்டும். இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர். கோடைக் காலத்தில் ஹெல்மெட் அணியும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் அணிவதால், வியர்வையானது தலையில் உள்ள துளைகள் வழியாக உள்ளிறங்கும். அதனால் முடியின் வேர்கள் வலுவிழக்கச் செய்து, முடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே தலையை சுற்றி ஸ்கார்பை கட்டிக் கொண்டால் முடி உதிர்வு குறையும்.

தலை முடியின் ஸ்டைலை மாற்றவும், முடி கொட்டுகிறதா, முடியை தளர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் போனி டைல், பின்னல் போன்ற ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்கி முடியை உதிரச் செய்து சீக்கிரமே வழுக்கையும் விழச்செய்யும்.

உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நல கோளாறுகள் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். தீராத நோய், கடும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் போன்றவைகளை ஒழுங்காக கவனித்தால், ஆரோக்கியமான முடியை பாதுகாக்கலாம்.

மருந்து உண்ணுதலில் கவனம் தேவை. சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். அதில் ஒன்று தான் முடி உதிர்வு. ஆகவே எப்போதும் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு, பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொண்டு, பின் மருந்துகளை வாங்கவும். அப்படி முடியை பாதிக்கும்படி பக்க விளைவு ஏற்பட்டால், மருத்துவரை வேறு மருந்துகளை மாற்றி தரச் சொல்லவும்.


வேதிப்பொருட்கள், ரசாயனங்களை (Chemicals)  விட்டு தள்ளியே இருக்கவும் கடுமையான ரசாயனங்கள் (Chemical Conditioners, Shampoos, Hair Lotions)  மற்றும் நிரந்தர முடிச்சாயங்கள் (Permanent Hair Coloring) , முடியின் ஆரோக்கியத்தை பாதித்து விடும். முடிகொட்டும் போது தலை முடிக்கு சாயம் பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்







--==--

Please Contact for Appointment