Thursday, November 7, 2013

எங்கள் வீட்டில் என் தாத்தா, அப்பா, தம்பி எல்லோருக்கும் மூலம் உள்ளது. மூலநோய் தீர என்ன வழி?

கேள்வி: எங்கள் வீட்டில் என் தாத்தா, அப்பா, தம்பி எல்லோருக்கும் மூலம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. மூலநோய் தீர என்ன வழி? in my family all are having piles, how can we overcome from piles,

மருத்துவர் பதில்: மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வீங்குவதால் மூல நோய் வருகிறது.

இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.  நாட்பட்ட மலச்சிக்கலால்,கல்லீரலில் தங்களுடைய வேலைகளைச்சரிவர செய்யாவிடில், தாய் தந்தை வழியாகவும், பட்டினி கிடத்தல், பசியின்மை இவை போன்றவற்றால் கீழ் நோக்கி மலத்தை தள்ளும் குடல் தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றாlலும் வருகிறது.

மேலும் ஒரு குடும்பத்தில் பலருக்கு மூலநோய் இருக்கிறதென்றால் உங்கள் அனைவரின் உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது, அதிக காரம், மசாலா, அசைவ உணவு வகைகள், நேரம் தவறி உண்பது போன்ற பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மலம் கழித்தபின்பும் மலக்குடலில் இருப்பது போன்ற உணர்வு, ஆசன வாயில் எரிச்சல், காந்தல் வலி, உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாதது, மனச்சோர்வு, அடிக்கடி கோபம் கொள்ளுதல் போன்றவை ஏற்படும். burning pain in anas - Asana Vai, Erichal, kobam, indigestion

உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே செய்யும் வேலை. நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது. குடலில் அல்சர் இருந்தாலும் மூலம் உண்டாகும்.

முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சிறிது ரத்தப்போக்கும் இருக்கலாம். இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும். No pain in initial stage of piles, some time you can feel some discomfort in anal region, Bleeding with motion, then mass- sathai- may coming out,

தினசரி உணவு வகைகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவிற்கு பின் ஏதாவது ஒரு பழவகையை சேர்த்துக் கொள்ளலாம். 

தினம் வாழைப்பழம் சாப்பிடலாம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பகலில் மோரும், இரவில் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். இளநீர், எலுமிச்சைப்பழம், நெய், வெண்ணெய், நெய்யில் வதக்கிய வெங்காயம், கருணைக்கிழங்கு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் :

கருணைக்கிழங்கு தவிர அனைத்து கிழங்கு வகைகள், பாசிப்பயிறு தவிர அனைத்து பயிர்வகைகள், முட்டை முதல் அனைத்து அசைவ உணவுகள், காரம், மசாலாப் பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.

பகலில் தூக்கம், புகைபிடித்தல், மது வகைகள், வெயிலில் அதிகம் செல்வது, காற்றுப் புகாத கடினமான இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல் இவைகளை தவிர்க்க வேண்டும்.

உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.

தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த நோய் அதிகம் தாக்கப்படுகிறது. வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து வெளிவர சிறந்த வழி.

முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாயில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல், அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது.

இதில் ஏற்படும் கொப்பளங்கள் குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே இதற்கு தீர்வு காண்பது அவசியம். Homeopathy medicines helps for piles without surgery
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்==--==


Please Contact for Appointment