Wednesday, March 20, 2013

சுய இன்பம் (MASTURBATION) சில தகவல்கள்.









சுய இன்பம் (MASTURBATION) சில தகவல்கள்.

ü  சுய இன்பம் (MASTURBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.

ü  நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள்.

ü  ஒரு ஆய்வில் 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ü  ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?
ü  திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ü  சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ü  ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப்பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

ü  எப்போதாவது செய்யும் (தோராயமாக மாதத்திற்கு 2 – 3 முறை) சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.

ü  இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

ü  சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பத்தால் கை, கால் சோர்வு, ஆண் உறுப்பு தளர்ந்து போகுதல், நினைவாற்றல் குறைபாடு, கை, கால் நடுக்கம், உடலுறவில் நாட்டமின்மை போன்றவற்றால் பாதிப்படைகின்றனர்.

ü  குறிப்பாக எப்போதாவது செய்யும் சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பம் தேவையற்ற உடல் பாதிப்பையும் மன நல மாற்றத்தையும் உண்டாக்கலாம்.

ü  சுய இன்பத்தால் குழந்தை பிறப்பதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது.
ü  ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்திலும் உடலுறவில் வெளிவரும் விந்திலும், விந்தனுக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு.

சுய இன்பத்தில் ஈடுபடா விட்டாலும் விந்து தானாகவே வெளியேறிவிடும். இதனால் எப்போதாவது செய்யும் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை

எனவே அதிகப்படியான சுய இன்பத்தால்
Ø  கை,கால் நடுக்கம்,
Ø  அசதி,
Ø  சோர்வு,
Ø  மனத்தளர்ச்சி,
Ø  விந்து முந்துதல்,
Ø  ஆணுறுப்பு எழுச்சி குறைபாடு,
Ø  உடலுறவில் நாட்டமின்மை,
Ø  துனைவியை திருப்தி படுத்த முடியாமை,
Ø  நினைவாற்றல் குறைபாடு,
Ø  எதிலும் கவனமின்மை,
Ø  படபடப்பு,
Ø  மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமை,
Ø  திருமணத்திற்கு தயக்கம்,
Ø  உறுப்பு சிறுத்தல்,
Ø  ஆணுறுப்பில் வலி

போன்ற உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தை தவிர்த்து, மேற்கண்ட பிரச்சினைகளால் பாதித்திருந்தால் தயங்காமல் உடனடியாக சிறப்பு மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற்று பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்.


 மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



எங்களின் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830
பாண்டிச்சேரி – புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168

9786901830

Vivekanantha Clinic Health Line

இலந்தை பழமும் அதன் மருத்துவ குணங்களும்







இலந்தை பழமும் அதன் மருத்துவ குணங்களும்

இலந்தை பழம் மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74% கலோரி,17 % மாவுப் பொருள், 0.8 % புரதம், மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

Ø  உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.

Ø  இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீ. உயரம் வரை கூட வளரும்.

Ø  இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக்திகள். மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

Ø  புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

Ø  இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.

Ø  இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.

Ø  வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.

Ø  தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

Ø  இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஏற்றது.

Ø  இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

Ø  இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலுண்டு







விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

இரத்த சோகை - காரணமும் சிகிச்சையும்










இரத்த சோகை
இரத்த சோகை  என்பது  ரத்தத்தில் சிவப்பு  அணுக்கள்  குறைவது, சிவப்பு அணுவில்  ஹீமோகுளோபின்  குறைவது  அல்லது  இரண்டும்  குறைவது ஆகும் .

சராசரி சிவப்பணுக்களின்  அளவு :
ஆண் : 4.5--6 million/cubic mm
பெண் :4.0-5.5 million/cubic mm

சராசரி ஹீமோகுளோபின் அளவு:
ஆண் :13-16 gram/dl
பெண் : 11.5-14.5 gram/dl

அறிகுறிகள்
Ø  உடல் சோர்வு
Ø  உடல் எடை குறைதல்
Ø  பசியின்மை.
Ø  கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்
Ø  வாய்ப்புண்,
Ø  அசதி
Ø  மேல் மூச்சு வாங்குதல்.
Ø  கால், முகம் வீக்கம்.
Ø  மயக்கம், தலைசுற்றல்.
Ø  மஞ்சள் காமாலை.
Ø  வயிற்றுவலி.
Ø  அதிகம் வியர்த்துக் கொட்டுதல்.
Ø  மயக்கமுடன் வாந்தி.
Ø  புண்கள் ஆறாமல் இருத்தல்.
Ø  அடிக்கடி உடல் நலம் குறைதல்.
Ø  விழுங்குதில் சிரமம்.
Ø  காரணமற்ற தலைவலி.
Ø  படபடப்பு
Ø  கை, கால் குடைச்சல்.
Ø  குழப்பமான மனநிலை.

இரத்த பரிசோதனைகள் :
v  இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )
v  இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.
v  இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு

காரணங்கள் :
Ø  இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக
Ø  இரத்ததின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.
Ø  உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக் குறைவினால் உண்டாகும் இரத்த சோகை.
Ø  இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை ..

மருத்துவம் :
இரும்பு சத்து  மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை  படி சாப்பிடவேண்டும்.

இரும்பு சத்து அதிகமுள்ள உணவுகள் :
ü  தானியம் - கம்பு , ராகி , எள்ளு , சோயா
ü  கீரை - பசலை , புதின , புளிச்ச கீரை , கொத்தமல்லி
ü  காய்-- முருங்கை , பீற்கை , சுண்டைகாய், பாகற்காய்
ü  பழங்கள் - பேரிச்சம் , சப்போட்ட, நாவல் , திராட்சை
ü  மற்றும்  நாட்டு வெல்லத்தில் அதிக அளவு  இரும்பு  சத்து உள்ளது.



மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)

9786901830

Vivekanantha Clinic Health Line

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு






கேள்வி: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகள் எவை? 15 வருடங்களாக இரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுகிறேன். சர்க்கரை வியாதியை சிறு குறிஞ்சான் இலை மூலம் குணப்படுத்தி  விட்டேன். அப்படி இரத்த அழுத்தத்திற்கும் ஏதாவது நிவாரணி கிடைக்குமா?

பதில்
முதலில் நீங்கள் சிறு குறிஞ்சான் இலை மூலம் சர்க்கரை வியாதியை குணப்படுத்தி விட்டதாக சொல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. சில ஆய்வுகளின் அடிப்படையில் சர்க்கரை வியாதிக்கு சிறு குறிஞ்சான் இலை நல்ல உணவு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

v  ஆனாலும் சிறு குறிஞ்சான் இலை சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் மருந்து என்று எந்த மருத்துவத்திலும் குறிப்பிடப்படவில்லை.  இதுவரை நாட்பட்ட சர்க்கரை வியாதியைக் பூரணமாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.

v  இன்சுலின் உட்பட அனைத்து மருந்துகளும் நாட்பட்ட நீரழிவு நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடாமல் கட்டுப் பாட்டில் வைத்திருக்கவே பயன்படுத்தப்படுகிறது.

v  அதாவது சர்க்கரை வியாதிக்கு மாத்திரை உட்கொள்பவர்கள் ஆயுசு முழுவதும் மாத்திரையை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

v  அதை கட்டுப் பாட்டில் வைத்திருக்க குறிஞ்சான் இலை மிகவும் உகந்தது என்றாலும் அதனால் உங்கள் நோய் பூரணமாக குணமாகி விட்டதாக் எண்ணி அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு
உயர் இரத்த அழுத்தம் ( Hyper Tension/ High Blood Pressure) கொண்டவர்கள் , அதன் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ü  உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப் பாட்டில் வைத்திருக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கவும்  வேண்டுமானால் அவர்கள் மருந்துகளோடு சரியான உணவுப் மற்றும் வாழ்கை முறைப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

ü  புகைத்தல் முற்றாக நிறுத்தப் பட வேண்டும். சாதாரனமானவர்களில் கூட புகைத்தலின் பின்பு இதயத் துடிப்பு வீதம் அதிகரிக்கும்இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

ü  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் புகைத்தால் அவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் பல மடங்கு அதிகரிக்கின்றது.

ü  அதிகம் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ü  பொட்டாசியம் அதிகம் கொண்ட வாழைப்பழம், உருளைக் கிழங்கு, கொய்யாபோன்றவரை உட்கொள்ள வேண்டும்.

ü  பழங்கள் , மரக்கறி வகைகள், கடலை வகை, நார் சத்து உணவுகள், கொழுப்பு குறைந்த பால் வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள  வேண்டும்.

ü  மதுவின் அளவை குறைக்க வேண்டும்.

ü  உடல் எடையை கட்டுப் பாடாக வைக்க வேண்டும்.

ü  உடற்பயிற்சி, நடை பயிற்சி மிக முக்கியம்.






மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment