Saturday, August 23, 2014

திருமணத்திற்கு முந்தைய உளவியல் / மருத்துவ ஆலோசனைகள். Premarital Counseling & Premarital Health Checkups




premarital and post marital counseling specialist dr.senthil kumar psychologist, திருமணத்திற்கு முந்தைய பின்பு முன்பு ஆலோசனைகள் மருத்துவ பரிசோதனைகள்




திருமணத்திற்கு முந்தைய உளவியல் /  மருத்துவ ஆலோசனைகள். Pre
Marital Counseling & Premarital Health Checkups

தாம்பத்ய உறவின் முதல் 'அணுகுமுறை' என்பது முதல் அனுபவத்தின் துவக்கம்.

முதல் இரவு என்பது, இரு பாலினத்தவரின் நிர்வாணத்தை காண நேரும் முதல் சந்திப்பு  என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதுவே காதல் தம்பதிகளாக இருந்தாலோ, ஏற்கனவே உடலுறவு வைத்திருந்தாலோ, அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட  தாம்பத்ய உறவின் முதல் கட்டம் என்று வைத்துக் கொள்ளலாம்.

உடல் பினைப்பின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துவிடக்கூடாது என்பதில் மிககவனம் தேவை.

மனத்தடுமாற்றம், ஏமாற்றம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை சுமந்து கொண்டு முதல் இரவு அறைக்குள் நுழைந்தால் வேதனை தான் மிஞ்சும்.

எத்தனையோ பேர் வாழ்க்கையில் முதல் இரவு தோல்வி என்ற விதி விளையாடி பலரை வேதனைத் தீயில் தள்ளியுள்ளது.

Ø  எனக்கு அழகான மனைவி அமையவில்லை.
Ø  மனைவியுடைய அணுகுமுறை சரியில்லை.
Ø  செக்ஸ் விஷயத்தில் அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை
என்ற குற்றச்சாட்டுக்களை ஆண்கள் சுமத்துவதுண்டு.

தங்களது மனதில் எழுந்த ஆசைகளை நன்கு பேசி தெரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்பது ஆண், பெண் இருபாலரின் ஒருமித்தமான கருத்து.

ஆனால், சில ஆசைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதை விட செயலில் காட்ட முனைவது மனித இயல்பு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும்.

இது நடைமுறை சாத்தியமா? என்றால், இல்லை.

இதெல்லாம் சொல்லி கொடுத்துதான் தெரிஞ்சுக்கனுமா? அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளட்டும் என்று வயதானவர்கள் சொல்வதுண்டு.

உடல் உணர்ச்சிகளை பண்பாட்டுக்கு உட்பட்டு பகிர்ந்து கொண்டு.  சில நெறிமுறைகளை, அனுபவம் முலம் தெரிந்து கொண்டவற்றை அவர்கள் தங்களது சந்ததியினருக்கு சொல்லி கொடுத்தால் நிறைய பிரச்னைகள் எழாது.

பெரியவர்கள் அனுபவ பாடத்தை சொல்லாமல் விட்டுவிடுவதால், நண்பர்களின் தவறான ஆலோசனையை கேட்டு தவறான செயலில் இறங்கி தேவையில்லாத வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.

பொதுவாக திருமண நாளின்போது  அதிகாலையில் இருந்தே மணமக்கள் ஓய்வே இல்லாமல் சடங்குகளை செய்து களைத்திருப்பார்கள்.

ஒரே நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து மழையில் நனைந்து ஒருவித பதட்டத்தோடு இருப்பார்கள். அன்றைய தினத்தில் இருவருக்குமே ஒய்வு அவசியம் தேவை.

மன ஒற்றுமைக்காக சில விஷயங்களைப் பேசி விட்டு புதுமாப்பிள்ளை, பெண்ணும் உடலுக்கு ஒய்வு கொடுப்பது மிகவும் நல்லது.

மனைவிக்கு ஆசைகள் அதிகமாக இருந்துவிட்டு, கணவன் ஒதுங்கிக் கொண்டாலோ, கணவன் அவசரப்பட்டு, மனைவி ஒதுங்கினாலோ ஒருவித வேதனை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும். அதாவது எதிர்பார்ப்பவருக்கு ஏமாற்றம் ஏற்படும். அதனால் தவறு இல்லை.

தேர்வு எழுதும் முன்பு எப்படி பாடங்களை படித்துக் கொண்டு தயாராகிறோமா? அப்படிதான் முதலிரவு அறைக்குள் நுழையும் போது மனத்தெளிவு, ஒரு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

செக்ஸ்தானே என்று அலட்சியமாக இருந்துவிட்டு உங்களது ஆசைகளை நிறைவேற்ற முனைந்தால் உங்களது எதிர்பார்ப்புகள் தோற்றுப் போகும். இது எத்தனையோ தம்பதிகள் வாழ்க்கையில் நடந்துள்ளது.

முதலிரவு சம்பவங்களை பலர் தங்களது வாழ்க்கையில் நினைத்து பார்ப்பதுண்டு. பலருக்கு இனிமையான நினைவுகளாக இருக்கும். பலருக்கு வேதனையாக இருக்கும். அன்றயதினம் மனதில் ஏற்பட்ட காயம் ஆறாமல் உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ உண்மையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அதனால் கணவனும் மனைவியும் ஒருவரை  ஒருவர் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

ஆண் பெண் இருவருமே, திருமணத்திற்கு முன்பு பாலியல் கல்வி ஆலோசகரை தயக்கமின்றி அணுகி ஆலோசனை பெறுங்கள்.

திருமணத்திற்கு முந்தைய ஆலோசனையில் மருத்துவர், உளவியல் ஆலோசகர் உங்களுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரைப்பார். அந்த பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ளவேண்டும்.

திருமணத்திற்கு முன்பு ஆலோசனை பெற்று அதன்படி நடந்தால் எல்லா நாட்களுமே முதலிரவாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

வாழ்த்துகள்.



திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் திருமணத்திற்கு முந்தைய உளவியல் ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 24 – 99******00 – திருமணத்திற்க்கு முந்தைய ஆலோசனை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.









==--==

Please Contact for Appointment