Friday, October 17, 2014

முதலுதவி – நீரிழிவு நோய், First Aid for Hypoglycemia Patients




 முதலுதவி – நீரிழிவு நோய், First Aid for Hypoglycemia Patients   நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தானது அவர்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.  இரத்தத்தில் குளுக்கோஸின் (சர்க்கரையின்) அளவு அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல , சர்க்கரையின் அளவு குறைவது கூட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது ஹைப்போ கிளைசீமியா (HYPOGLYCEMIA) எனப்படும்.  குறிப்பாக நீரழிவு மாத்திரை சாப்பிடும் ஒருவர், அந்த வேளை உணவை சாப்பிடாமல் விட்டால் அல்லது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டால் சீக்கிரம் சர்க்கரையின் அளவு குறைந்து விடலாம்.  இவ்வாறு சர்க்கரையின் அளவு குறையும் போது ஒருவருக்கு கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.....   நெஞ்சு படபடப்பு – Increased  Heart Beat,  வியர்த்தல் – Excessive Sweating,  மயக்கம் – Vertigo   தலைச்சுற்று - Giddiness  தலைவலி - Headache  உடலின் சில பகுதிகளில் உணர்வற்ற தன்மை – Numbnesss Sensation in Some Part of Body  பார்வை மங்குதல் – Diminished Vision  வலிப்பு – Fits   ஆகவே நீங்கள் நீரழிவு மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரங்களில் இப்படி ஏதாவது அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சர்க்கரை கலந்த ஏதாவது உட் கொள்வதன் மூலம் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளலாம்.  சில வேளைகளில் நீரழிவு நோயாளிகள் திடீரென  மயக்கமடைந்தாலோ அல்லது வலிப்பு ஏற்பட்டாலோ அருகிலே இருப்பவர்கள் அவர் வாயிலே குளுக்கோஸ் அல்லது இனிப்பு ஏதாவதை கொடுப்பது அவரை பாதுகாக்கும்.  இந்த குறிகள் உண்மையில் சர்க்கரை குறைந்த்தால்தான் ஏற்பட்டது என்றால் இனிப்புக் கொடுத்து சில நிமிடங்களிலே அவர் சாதாரண நிலைக்கு வந்து விடுவார். இவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துப் போக வேண்டிய அவசியமில்லை.  ஆனாலும் இனிப்பு போதிய அளவு கொடுத்தும் சாதாரண நிலைக்கு வராவிட்டால் இது வேறு காரணமாக இருக்கலாம் இப்படிப் பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  நீரழிவு நோயாளிகள் மட்டுமல்ல அவரின் உறவினர்கள் கூட இதுபற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.




முதலுதவிநீரிழிவு நோய், First Aid for Hypoglycemia Patients

நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தானது அவர்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இரத்தத்தில் குளுக்கோஸின் (சர்க்கரையின்) அளவு அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல , சர்க்கரையின் அளவு குறைவது கூட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது ஹைப்போ கிளைசீமியா (HYPOGLYCEMIA) எனப்படும்.

குறிப்பாக நீரழிவு மாத்திரை சாப்பிடும் ஒருவர், அந்த வேளை உணவை சாப்பிடாமல் விட்டால் அல்லது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டால் சீக்கிரம் சர்க்கரையின் அளவு குறைந்து விடலாம்.

இவ்வாறு சர்க்கரையின் அளவு குறையும் போது ஒருவருக்கு கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.....

Ø  நெஞ்சு படபடப்பு – Increased  Heart Beat,
Ø  வியர்த்தல் – Excessive Sweating,
Ø  மயக்கம் – Vertigo
Ø  தலைச்சுற்று - Giddiness
Ø  தலைவலி - Headache
Ø  உடலின் சில பகுதிகளில் உணர்வற்ற தன்மை – Numbnesss Sensation in Some Part of Body
Ø  பார்வை மங்குதல் – Diminished Vision
Ø  வலிப்பு – Fits

ஆகவே நீங்கள் நீரழிவு மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரங்களில் இப்படி ஏதாவது அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சர்க்கரை கலந்த ஏதாவது உட் கொள்வதன் மூலம் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளலாம்.

சில வேளைகளில் நீரழிவு நோயாளிகள் திடீரென  மயக்கமடைந்தாலோ அல்லது வலிப்பு ஏற்பட்டாலோ அருகிலே இருப்பவர்கள் அவர் வாயிலே குளுக்கோஸ் அல்லது இனிப்பு ஏதாவதை கொடுப்பது அவரை பாதுகாக்கும்.

இந்த குறிகள் உண்மையில் சர்க்கரை குறைந்த்தால்தான் ஏற்பட்டது என்றால் இனிப்புக் கொடுத்து சில நிமிடங்களிலே அவர் சாதாரண நிலைக்கு வந்து விடுவார். இவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துப் போக வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் இனிப்பு போதிய அளவு கொடுத்தும் சாதாரண நிலைக்கு வராவிட்டால் இது வேறு காரணமாக இருக்கலாம் இப்படிப் பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நீரழிவு நோயாளிகள் மட்டுமல்ல அவரின் உறவினர்கள் கூட இதுபற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.






==--==

Please Contact for Appointment