Friday, October 24, 2014

மூட்டுவலி ஹோமியோபதி சிகிச்சை - Joint pain Homeopathy treatment mootuvali sikiccai, kaal vali sikicai, kai vali sikicai, மூட்டுவலி சிகிச்சை, கால் வலி சிகிச்சைகேள்வி: 26 வயதான பெண் நான், எனக்கு இப்போது அடிக்கடி மூட்டுவலி வருகிறது, இது எதனால், மூட்டுவலிக்கு சிகிச்சை உண்டா?

பதில்: முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் மூட்டுவலி அதிகம் வரும் என்று கருதப்பட்டது. ஆனால் இன்று இளம் பெண்களைக்கூட இந்த மூட்டு வலி விட்டு வைப்பதில்லை. அதற்கு நம் வாழ்க்கை முறையில் உள்ள குறைபாடுகளும் ஒரு காரணம்தான். Now a day’s joint pain affects the younger generation, not only the old aged peoples.

இடுப்பு எலும்புகளில் வலி, முழங்கால் மூட்டுக்களில் வலி, பின் முதுகு எலும்புகளில் விரைப்புத் தன்மையுடன் கூடிய வலி அடிக்கடி இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை அதாவது உணவுப் பழக்கம் உள்ளிட்ட பழக்க வழக்கங்களைக் கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது. if you have Pain in hip, pain in knees, lower back ache, stiffness in joints, stiffness in back, means you need to change your diet and behavior.

ஆரம்பகால அறிகுறிகளிலேயே அதற்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரணிகளை சாப்பிட்டு வலியைக் குறைக்கக் கூடாது. அது மூட்டுக்களைச் சுற்றியுள்ள மென்மையான சவ்வுகளையும் தசைகளையும் சிதைத்து விடும். பின்னர் அறுவை சிகிச்சை அளவிற்குச் செல்ல நேரிடும். its good to take the treatment from the beginning, if you take pain killers without consulting the doctor, that may affect the joints and membranes, some time it may leads to surgery.


ஆரம்ப கால அறிகுறிகள்: initial signs and symptoms

  • பெரும்பாலும் அதிகாலையில் மூட்டுக்களில் வலியோ விரைப்புத் தன்மையோ தெரியும். Pain and stiffness in joints at early morning.

  • சிலருக்கு வேலை செய்ய ஆரம்பித்தவுடன் முழங்கை, முழங்கால், இடுப்புப் பகுதிகளில் வலி தெரியும். Pain starts after starting our routine works.

  • இடுப்பு (Hips), பின் முதுகு,  முழங்கால் எலும்பு இணைப்புகள் (Knees) ஆகியவற்றின் மூட்டுக்களைச் சுற்றி விரைப்புத் தன்மையோ வலியோ வீக்கமோ இருந்தால் உடனே பரிசோதித்துப் பார்த்து விடவேண்டும். need to consult the doctor if you have any pain, stiffness, swelling, or Bulging, in joints.


வாழ்க்கை முறை மாற்றம்: Life style changes

உடல் எடை:
¬  மூட்டு வலிக்கு மிக அதிகக் காரணமாக குறிப்பிடுவது உடல் எடையைத்தான். அதிக எடை, வலியை விலைக்கு வாங்கும். உடல் எடை அதிகமாக இருந்து, மூட்டுவலி உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைத்தால் போதும். மூட்டு உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். need to reduce the weight, maintain your BMI

உணவுகள்:
¬  மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுப்பொருள்களை குறைத்துச் சாப்பிடுவது அவசியம். ரொட்டி, உருளைக்கிழங்கு, அரிசிச் சாதம் போன்ற கார்போஹைட்ரேட் (மாவுச் சத்து) அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும். இதனால் உங்களுக்கு இன்னொரு நன்மை, சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ வர வாய்ப்புகள் குறைவு. கார்போஹைட்ரேட்டின் அளவு கூடும் போதுதான் உடலில் இன்சுலினின் அளவு கூடி, கொழுப்பு சேர்கிறது. உடல் எடை போடுகிறது. மது, புகை, கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  avoid smoke, alcohol, Reduced intake of carbohydrates,

தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள்: Muscle exercises
¬  மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசைகள் Muscle stiffness இழுக்கப்படுவதும், சிலருக்கு தசைகளில் இழுப்பு ஏற்படுவதும்தான் மூட்டு வலிகளுக்குக் காரணம். அதனால் தசைகள் வலுவாக இருக்கவேண்டும். அதற்காக பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். Muscle stiffness may be the reason for joint pain, so need to do some exercise o relive muscle stiffness.
¬  வாக்கிங், ஓட்டம், நீச்சல் போன்றவற்றை முறையாக எடுத்துக் கொள்பவர்களுக்கு தசைகள் வலுவுடன் இருக்கும். தசைகள் வலுப்பெற வலுப்பெறத்தான் மூட்டுகளைச் சுற்றியுள்ள பகுதிகள் வலுவுள்ளதாக இருக்கும். walking, jagging, swimming helps to strength the joints and muscles,
¬  சிலர் மூட்டுக்களில் அழுத்தம் அதிகம் ஏற்படும் அளவிற்கு உடல் உழைப்பில் ஈடுபட்டு இருப்பார்கள். இந்தச் சமயங்களில் மூட்டுக்களில் காயம் ஏற்படலாம். மூட்டுக்களில் வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அடிக்கடி வலி வரும். avoid to give much stress in joints, if you experience pain, swelling, or redness in joints means you need to consult the doctor immediately.


மூட்டுவலிக்கான ஹோமியோபதி  மருத்துவம்- Homeo treatment for Joint pain

தசைகளைப் பலம் பெறச் செய்யவும், மூட்டுக்களைச் சுற்றியுள்ள சவ்வு பலப்படுத்தவும் ஹோமியோபதியில் மருந்துகள் சில உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இம்மருந்துகளை உட் கொள்வது நல்லது.

Homeopathy medicines helps to strengthen the joints and membranes. its good to take regular homoeopathy medication with doctor advice.   ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மூட்டுவலி moottuvali – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


==--==

Please Contact for Appointment