Saturday, November 8, 2014

மாதவிடாயின் போது கடைபிடிக்க வேண்டியவை - Follow these points while Menstrual Cycle


  கேள்வி: வயதுக்கு வருதல் அல்லது பூப்பெய்தல் என்றால் என்ன? மாத விடாய் வரும்போது கவனிக்க வேண்டியது என்ன? மருத்துவர் பதில்: வயதுக்கு வருதல் அல்லது பூப்பெய்தல் என்பது சூலகத்தில் உருவாகும் கருமுட்டைகள் முதிர்ந்து போதிய வளர்ச்சியடைந்து அதனால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் கருப்பை வளர்ச்சியுற்று அதன் உட்புறச் சவ்வில் ஏற்படும் கசிவே உதிரமாக வெளியேறுகிறது. இது மாதம் ஒருமுறை அதாவது 27-30 நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சியாக நடைபெறும். 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும்.  பொதுவாக 14 வயது முதல் 45 வயது வரை மாதவிலக்கு சுழற்சி நடைபெறுகிறது. பழங்காலத்தில் பெண்கள் அடிக்கடி குழந்தை பெற்றுக்கொண்டதால் மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போனது. அதுபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மாதவிடாய் சுழற்சி ஒருசிலருக்கு தடைபடும். முன்பெல்லாம் மாதவிலக்குக் காலங்களில் பெண்களை தனியாக தங்க விடுவார்கள். எந்த வேலையும் செய்ய விடாமல் முழு ஓய்வு கொடுப்பார்கள். இது நன்மைக்கே. ஏனெனில் இந்த நாட்களில் பெண்களுக்கு இரத்தப்போக்கால் சோர்வு, உடல்வலி, வயிறு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இப்போது நவீன உலகத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது இல்லை. பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு சுழற்சியை ஒரு துன்பமாக நினைக்கின்றனர். பசி, தூக்கம் போல் இதுவும் ஒரு வித இயற்கை நிகழ்வுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி போன்றவற்றால் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் மாதவிலக்கை தள்ளிப் போடவும், சில சமயங்களில் வெகு விரைவில் வரவும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. இயல்பாக மாதம் ஒருமுறை என்ற சுழற்சியை மாற்றினால் பின் வரும் காலங்களில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வரும். பெண்களின் மாதவிலக்கானது ஒவ்வொருவரின் உடலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். சில பெண்களுக்கு மாதவிலக்கின் இடைவெளி ஒழுங்கற்றிருக்கும். ஓரளவுக்கு உதிரம் குறைவாக, உறைந்த நிலையில் சிறு கட்டிகளாகக் கூட வெளியேறும். அடிவயிறு இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும். வயிற்றுவலி, மலச்சிக்கல் ஏற்படும். சிலருக்கு வயிற்றுப் போக்கு கூட ஏற்படலாம். எரிச்சல், கோபம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும். சில பெண்களுக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு பருமனானது போன்று தோண்றும். ஒருபக்க தலைவலி தோன்றலாம். சில பெண்களுக்கு சாதாரனமாக இரத்தபோக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் தீர்வு காணலாம். அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு. மாதவிடாயின் போது கடைபிடிக்க வேண்டியவை:  மாதவிடாய் பற்றி மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.  மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் நீண்ட தூர பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். அப்போது நாப்கின்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.  மாதவிடாய் காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.  எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.  அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.  அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.  ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.  டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.  காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது.  வாசனை திரவியங்களை உபயோகப்படுத்த வேண்டாம்.  விளம்பரங்களில் வருவது போல் நீண்ட நேரம் ஒரே நாப்கின் வைத்திருக்காமல், தேவையான இடைவெளியில் நாப்கின்களை மாற்றிக்கொள்ளவேண்டும்  டேம்பூன்கள் பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்தல் நல்லது.  மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.   மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com For appointment please Call us or Mail Us முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
கேள்வி: வயதுக்கு வருதல் அல்லது பூப்பெய்தல் என்றால் என்ன? மாத விடாய் வரும்போது கவனிக்க வேண்டியது என்ன?

மருத்துவர் பதில்: வயதுக்கு வருதல் அல்லது பூப்பெய்தல் என்பது சூலகத்தில் உருவாகும் கருமுட்டைகள் முதிர்ந்து போதிய வளர்ச்சியடைந்து அதனால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் கருப்பை வளர்ச்சியுற்று அதன் உட்புறச் சவ்வில் ஏற்படும் கசிவே உதிரமாக வெளியேறுகிறது. இது மாதம் ஒருமுறை அதாவது 27-30 நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சியாக நடைபெறும். 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும்.


பொதுவாக 14 வயது முதல் 45 வயது வரை மாதவிலக்கு சுழற்சி நடைபெறுகிறது. பழங்காலத்தில் பெண்கள் அடிக்கடி குழந்தை பெற்றுக்கொண்டதால் மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போனது. அதுபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மாதவிடாய் சுழற்சி ஒருசிலருக்கு தடைபடும்.

முன்பெல்லாம் மாதவிலக்குக் காலங்களில் பெண்களை தனியாக தங்க விடுவார்கள். எந்த வேலையும் செய்ய விடாமல் முழு ஓய்வு கொடுப்பார்கள். இது நன்மைக்கே. ஏனெனில் இந்த நாட்களில் பெண்களுக்கு இரத்தப்போக்கால் சோர்வு, உடல்வலி, வயிறு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இப்போது நவீன உலகத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது இல்லை.

பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு சுழற்சியை ஒரு துன்பமாக நினைக்கின்றனர். பசி, தூக்கம் போல் இதுவும் ஒரு வித இயற்கை நிகழ்வுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி போன்றவற்றால் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சிலர் மாதவிலக்கை தள்ளிப் போடவும், சில சமயங்களில் வெகு விரைவில் வரவும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. இயல்பாக மாதம் ஒருமுறை என்ற சுழற்சியை மாற்றினால் பின் வரும் காலங்களில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வரும்.

பெண்களின் மாதவிலக்கானது ஒவ்வொருவரின் உடலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

சில பெண்களுக்கு மாதவிலக்கின் இடைவெளி ஒழுங்கற்றிருக்கும். ஓரளவுக்கு உதிரம் குறைவாக, உறைந்த நிலையில் சிறு கட்டிகளாகக் கூட வெளியேறும். அடிவயிறு இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும். வயிற்றுவலி, மலச்சிக்கல் ஏற்படும். சிலருக்கு வயிற்றுப் போக்கு கூட ஏற்படலாம். எரிச்சல், கோபம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

சில பெண்களுக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு பருமனானது போன்று தோண்றும். ஒருபக்க தலைவலி தோன்றலாம்.

சில பெண்களுக்கு சாதாரனமாக இரத்தபோக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் தீர்வு காணலாம்.

அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு.

மாதவிடாயின் போது கடைபிடிக்க வேண்டியவை:
v  மாதவிடாய் பற்றி மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
v  மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் நீண்ட தூர பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். அப்போது நாப்கின்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
v  மாதவிடாய் காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
v  எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
v  அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.
v  அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.
v  ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.
v  டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.
v  காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது.
v  வாசனை திரவியங்களை உபயோகப்படுத்த வேண்டாம்.
v  விளம்பரங்களில் வருவது போல் நீண்ட நேரம் ஒரே நாப்கின் வைத்திருக்காமல்,  தேவையான இடைவெளியில் நாப்கின்களை மாற்றிக்கொள்ளவேண்டும்
v  டேம்பூன்கள் பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்தல் நல்லது.

v  மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

==--==

Please Contact for Appointment