Thursday, November 13, 2014

சில முக்கிய வீட்டுவைத்திய முறைகள் - Some Important Home Remedies
 narambu thalarchi sirappu maruththuvar, நரம்புதளர்சி சிறப்பு மருத்துவர்
தலைவலி குணமாக:
v  விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

v  கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமமாக கலந்து நல்லெண்ணையில் எரித்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.

v  திருநீற்று பச்சிலைசாறு, தும்பைச்சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.

தீராத தலைவலி நீங்க :
v  தும்பைப் பூவின் இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.

தலைப்பாரம் குறைய :
v  நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க:
v  சிறு கொண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

தலைபாரம், நீரேற்றம் நீங்க:
v  இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

கடுமையான தலைவலி:
v  ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல் அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

பெண்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க:
v  நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலரவைத்து பின்னர் குளித்துவர தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.

தலைப்பாரம் குறைய :-
v  தும்பைப்பூவை நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்துவர தலைப்பாரம் குறையும்.

தலை பாரம் குணமாக:
v  நல்லெண்ணெயில் 10 கருஞ்செம்பைப்பூவும், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரைமணிநேரம் கழித்து குளித்தால் வாரம் 2 முறை தலைபாரம் தீரும்.

ஒற்றைத் தலைவலி குணமாக:
v  தேத்தாங்கொட்டையுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்த் தாய்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.

v  துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கிப் பிழிந்து எந்தப் பக்கம் தலை வலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி அகலும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த:
v  நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி ½ லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

பித்த வாந்தியை நிறுத்த:
v  வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

வாந்தி நிறுத்த:
v  வேப்பம் பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

தீராத வாந்தி நிற்க :
v  சதகுப்பைஎன்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிண்டாய் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்பண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.


தலை நோய் குணமாக:-
v  ஒரு பங்கு நல்லெண்ணெயில் இரு பங்கு வல்லாரைச்சாறு கலந்து நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலையில் வரக்கூடிய எல்லாவிதமான நோய்களும் குணமாகும்.


தலைவலி
v  ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
v  கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்

தலைமுடி பளபளப்பாக:
v  தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.


முடி உதிர்தல் நிற்க:-
v  வெந்தயத்தை நீர் விட்டரைத்து தலையில் தேய்த்துத் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரில் குளித்து வர முடிகொட்டுவது நிற்கும்.
v  50 கிராம் குன்றிமணி, 2 மேசைக்கரண்டி வெந்தயம் ஆகிய இரண்டையும் பொடி செய்து தேங்காய் எண்ணையில் போட்டு ஒரு வாரத்திற்குப்பின் வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி இதைத்தலைக்குத் தடவிவர முடி உதிர்வது நிற்கும்.


முடி அழகு பெற:
v  கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.


பேன்களை ஒழிக்க:
v  கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
v  வினிகரை எடுத்து நீருடன் கலந்து தலையின் எல்லாப் பகுதியிலும் பரவுமாறு அழுந்த தேய்த்து மஜாஜ் கொடுத்து அரரமணி நேரம் ஊறவைத்தால் பொடுகு தொல்லை நீங்கும். 1 பங்கு வினிகருக்கு ஆறு பங்கு நீர் கலக்க வேண்டும். ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். குளிக்காமலும் விடலாம்.


வழுக்கை மறைய:
v  அதிமதுரத்தைப் பொடி செய்து எருமைப் பால்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வழுக்கை மறைந்து தலைமுடி வளர ஆரம்பிக்கும்.நகச்சுற்று நீங்க:-
¬  சுண்ணாம்பையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து நகச் சுற்று உள்ள இடத்தில் வைத்து கட்ட அது நீங்கி குணமாகும்.


நகங்களை அழகாக வெட்ட:
¬  வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


சேற்றுப்புண் ஆற:-
¬  உளுந்தை ஊறவைத்து விழுதாக அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்துத் தடவ புண் ஆறும்.


பித்த வெடிப்பு
¬  கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம்
¬  அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


கை, கால் வீக்கம்:
¬  அவாரம்பட்டை, சுக்கு கியவற்றை சம அளவு 400 மி.லி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.


நரம்புத் தளர்ச்சி நீங்க:-
¬  விளாம்பிசினைப் பசும்பாலில் ஊறவைத்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொட்டைப் பாக்களவு தினந்தோறும் சாப்பிட்டு வர நீங்கும்.


நரம்பு சுண்டி இழுத்தால்...
¬  ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.


கபம் நீங்கு உடல் தேற:
¬  கரிசலாங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட கபம் நீங்கி உடல் தேறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக்கூடாது


அடிக்கடி வரும் மயக்கத்தை நிறுத்த :
¬  5.6, சீத்தா பழக் கொட்டைகளை பொடியாக்கி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.


இடுப்பு வலி குணமாக :
¬  முருங்கைக் கீரையுடன் இடித்த சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பையும் கலந்து இடுப்பின் மீது தடவி சூடுபறக்க தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.


சொறி, சிறங்கு படை நீங்க:
¬  உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் வைத்து அரைத்து சொறி, சிறங்கு படை மீது போட குணமாகும்.


பித்தத்தை நீக்க:
¬  பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினசரி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.


விக்கல் குணமாக:
¬  நெல்லிக்காய் இடித்து சாறுபிழிந்து. நெய் கலந்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.


தேள்கடி விஷம் குறைய :
¬  தேள் கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நிற்கும்.


கம்பளிப் பூச்சிகடி குணமாக :
¬  கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.


இரத்த புற்று நோய் குணமாக:
¬  கேரட் ஜூஸ், (அல்லது) துளசிச் சாறு (அல்லது) திராட்சைச் சாறு ஆகியவைகளைக் கொடுத்து இரத்தப் புற்றுநோயினை குணமாக்கலாம்.


நீரிழிவு நோய்க்கு :
¬  நாவல்பழத்தின் 10 கொட்டைகள் எடுத்து, இடித்து 150 மில்லி நீர்விட்டு கண்டக் காய்ச்சி அந்நீரை காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும்.


ஞாபக சக்தி பெருக:
¬  பப்பாளி பழத்தை தினசரி சிறு அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.


காசினிக்கீரை:
¬  இதைச் சமைத்து சாப்பிட்டால் நல்ல மெருகுடன் உடல் இருக்கும். இரத்தம் சுத்தியாகி விருத்தியாகும். உடல் வீக்கம் குறையும்.


அலர்ஜிக்கு மருத்துவம்:
¬  அரை எலுமிச்சம்பழம் சாரும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரும் கலந்து அருந்திவந்தால் அலர்ஜி குணமடையும்.


இவையெல்லாம் வீட்டு வைத்திய முறைகள் மட்டுமே, இவற்றை செய்து நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெறவும்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார். 

==--==

Please Contact for Appointment