Friday, December 19, 2014

CHININUM SULPHURICUM – சினினம் சல்பூரிகம்


 CHININUM SULPHURICUM  – சினினம் சல்பூரிகம்


CHININUM SULPHURICUM  – சினினம் சல்பூரிகம்


ஒரு வேளை இம் மருந்தை உயர் வீரியத்தில் கொடுத்தால் அடக்கப்பட்ட மலேரியா வெளியே வந்து விடும். முதுகு பக்கம் குளிரும், இழுப்பும் நுரையீரலில் மேலே உள்ள பையில் மலேரியா அதை பற்றி சொல்லி கொண்டுயிருந்தால் இது வழிகாட்டும். திடீர்ன்னு வரும்;. வாத நோய், இடுப்பு மூட்டு பசையில் நோய், பிறப்பு உறுப்பின் உதட்டில், ஆஸன வாய் போன்ற சளி சவ்வில் தொல்லை. நீண்ட நாட்களாக மூத்திரக் காயில் வேக்காடு. திடீர்ன்னு பார்வை மந்தமாகிவிடும். பலஹீனத்தினால் ஓயாது விக்கல். இரத்தம்:- ஏதோ ஒரு வியாதியின் காரணமாக திடீர்ன்னு வேகமாக ஓடும், சிவப்பு செல்கள் எல்லாம் குறைந்து கொண்டே வரும். அசுத்த இரத்தம் வெளியேறாமல் உப்பு ஏற்பட்டு விடும். சளி சவ்விலும் வெள்ளை அணுக்கள் அதிகம் ஏற்பட்டு விடும். தலை:- நெற்றில் தோன்றி உச்சியில் முடியும் வலி. மதியம் அதிகமாகி விடும். கிறு, கிறுப்பும், பட, படப்பும் கடுமையாக இருக்கும். இடது புறம் வலிக்கும். இது மலேரியாவின் குறியாகும். இது கடுமையாகி ரோட்டில் நடக்கும் போது மயங்கி விழுந்து விடுவார்கள். எழுந்து நின்றாலும், கீழே பொத்து, பொத்துன்னு விழுந்து விடுவார்கள். காதுகள்:- காதுகளில் பயங்கரமாக சத்தம் கேட்கும். அதாவது வண்டு கத்துவது போலவும், உறும்புவது போலவும், கர்ஜனை செய்வது போலவும், இப்படி காதுகளில் ஆழமாக சத்தங்கள் கேட்கும். முகம்:- முகத்தை பார்தால் கண்ணை சுற்றி வளையம் கட்டியும், கண் உள்ளே போயிருக்கும். அப்பொழுது கிழத்தோற்றம் காணப்படும். அப்பொழுது முகத்தை தேய்த்து, தேய்த்து பிறகு கூட திருப்தியே இருக்காது. தண்டுவடம்:- அதிக உணர்ச்சியோடு, தோள்பட்டையில் அழுத்துற மாதிரி வலியிருக்கும். கடைசி கழுத்து எலும்பு வரை வந்து தலையும், கழுத்தும் வலிக்கும். சிறுநீர்:- சிறுநீர் இரத்தம், சளி மாதிரியும், அழுக்கு மாதிரியும், எண்ணெய் பசை மாதிரியும், சாக்பீஸ் மாதிரியும், சிறுநீரை பாட்டிலில் பிடித்து வைத்து பார்த்தால், அடியில் வீழ் படிவுகள் காணப்படும். மற்றும் யூரியா மாதிரி உருண்டைகளும், கோழிமுட்டை வெள்ளை கரு மாதிரி பசையாகவும், பாஸ்பரஸ் மாதிரியும், சிறுநீர் உப்பு மாதிரியும், நாற்றமும் இருக்கும். தேக வெப்பம் சரியாக இருக்காது. முட்டை வெள்ளை கரு மாதிரி கொட்டி கொண்டே இருக்கும். சருமம்:- சொறி, சிரங்கு, தடிப்பு, அரிப்பு, சருமபடை, கம்பரிசியாட்டம் சிறிய கொப்புளம், பிறப்பு உறுப்பில் பருக்கள், அதிக உணர்ச்சி மிக்க பொறுக்க முடியாத சரும தொல்லைகள். காய்ச்சல்:- பல விதமான வீக்கம், வலிகளோடு மதியம் மூன்று மணிக்கு குளிர் காய்ச்சல் தோன்றும். சூடான அறையில் இருந்தாலும் கூட பட, படப்பும், வருத்தமும் இருக்கும். உறவு:- CHIN, ARS. இப்படி பல மருந்துகளை நிலைமைக்கு தக்கவாறு கொடுத்து கொள்ளணும். முறிவாக்- N-M, LACH, ARS, PULS. குறிப்பு:- காமாலையும், சரும வியாதியும் கலந்து விட்டால் இது. இப்ப குளிர்காய்ச்சல் மேலோங்கி நிற்கும். சரும உணர்ச்சியும், அதிக நடுக்கமும் இருக்கும். (காமாலையும், குளிர்காய்ச்சலும் கலந்து, நடுக்கலோடு இதே மாதிரி தோன்றும். சரும நோய் இருக்காது, அதற்கு பதிலாக மிகுந்த களைப்பு இருக்கும். CHI-ARS.)
 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.--------Please Contact for Appointment