Friday, December 19, 2014

DIPTHERINUM - டிப்தீரினம்





 DIPHERINUM - டிப்தீரினம்











DIPTHERINUM - டிப்தீரினம்


டிப்தீரியா நோய் என்பது தமிழில் தொண்டை அடைப்பான் என்று பெயர். இது குழந்தைகளையே தாக்கி மூச்சு திணறி மரணத்தை ஏற்படுத்தி விடும். வாயைப் பார்த்தால் (உள்ளே) வெள்ளை நிறத்தில் பாலாடை மாதிரி ஜவ்வு படுதா போட்ட மாதிரி தொண்டையில் இருக்கும். இதனால் தான் குழந்தை மூச்சு திணறி இறந்து விடுகிறது. இந்த வியாதி பயங்கரமான வகையை சார்ந்தது. இதன் தோற்றம் எப்படி இருக்கும் என்றால் புத்தி மந்தமாகவும், முட்டாள் தனமாகவும், கேணம் பிடித்த மாதிரி பேசும், பார்க்கும், அப்போது மூச்சு விட திணறும் போது மூச்சு காற்று நாற்றம் வீசும். உடம்பு சூடு ஏறும், இறங்கும். ஒரு கட்டுப்பாட்டில் இருக்காது. உடம்பு ஆங்காங்கே குளிர்ந்து காணப்படும். (வட்ட, வட்டமாக குளிர்ந்து காணப்படும்.) அதே போல் ஆங்காங்கே இளைப்பு () பார்வை மங்கி, மந்தமாக, பரிதாபமாக மரணப்பாதையின் வாயில் செல்வதும். சிசுவானது எந்த நேரமும் மரணம் நேரலாம் என்ற நிலையில் அப்படியே செயல் இழந்து படுத்து கிடக்கும். பக்க வாதம் இருக்கும் போதும் இந் நோய் தோன்றலாம். இந் நிலையானது திடீர்ன்னு கொள்ளை நோயாக கூட பரவலாம். கொள்ளை நோய் தோன்றிருக்கும் காலங்களில் சற்று கவனமாகப் பார்த்தால் எந்த வகை கொள்ளை நோயாக இருந்தாலும் தக்க மருந்தை தேர்வு செய்து தர முடியும். கொள்ளை நோயில் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை பெரும் பகுதியை குறைக்க முடியும். இதனுடைய அதிகரிப்பு எதனால், என்றால் குளிர்ச்சியின் போதும், படுத்திருக்கும் போதும், பால் குடித்தாலும், தொண்டைக்கு வேலை தரும் போதும், தொல்லைகள் அதிகமாகி இரத்தம் கெட்டு போயிடும். இது எதனாலும் தணிவும், சுகமும் இருக்காது. ஆகவே இதன் அவசரத்தையும், ஆபத்தையும் உணர்ந்து கொள்ளனும்.






 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment