Wednesday, February 6, 2019

கண்டங்கத்திரி - Kandangathiri மருத்துவப் பயன்கள்





கண்டங்கத்திரி



வளரியல்பு: செடிகள்


தாவர விளக்கம்: தாவரம் முழுவதும் கூர்மையான முட்கள் கொண்டது. முட்கள், மஞ்சளாக பளபளப்பாக, 15 செ.மீ. நீளத்தில் காணப்படும். இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. பூக்கள் நீலநிறமானவை. 2 செ.மீ நீளத்தில் சிறு கொத்துகளில் காணப்படும். சிறு கத்திரிக்காய் வடிவமான காய்களையும், மஞ்சள் நிறமான பழங்களையும் உடையது.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், தரிசு நிலங்கள், திறந்த வெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது. இலை, பூ, காய், விதை, பட்டை, வேர், போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப்பயன் கொண்டவை.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரம்: கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும். பழங்குடி மக்கள், பழச்சாற்றை, காதுவலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் கோழையகற்றும் பண்பிற்காக சேர்க்கப்படுகின்றது.


ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி குணமாக

Ø  கண்டங்கத்திரியின் முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.


பல்வலி, பல் கூச்சம் தீர

Øபழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்து சுருட்டு போலச் செய்து புகைப் பிடிக்க வேண்டும்.

Ø  பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


கறிமுள்ளி – Solanum xanthocarpum:

தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி. சிறிதாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், நீல நிறமான பூக்களையும், வெள்ளை வரியுடைய உருண்டையான காய்களையும், மஞ்சள் நிறப் பழங்களையும் உடையது. பாப்பாரமுள்ளி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கின்றது. இலை, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இவை கோழையகற்றும்; சிறுநீர் மற்றும் வியர்வையை அதிகமாக்கும்.


சளி குணமாக

Ø  இலைச்சாறு 3 தேக்கரண்டி, சிறிதளவு தேன் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம், 3 நாட்கள் குடிக்க வேண்டும்.


இருமல் கட்டுப்பட

Ø  செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, சம அளவு கற்கண்டுத் தூள் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் ½ தேக்கரண்டி அளவு தேவையான அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.


Please Contact for Appointment