Tuesday, February 5, 2019

கடுக்காய் - Kadukkai மருத்துவப் பயன்கள்







கடுக்காய்



வளரியல்பு: மரம்


தாவர விளக்கம்: 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக் கூடிய, பல்லாண்டுகள் வாழும் தாவரம். பசுமையான தனித்த இலைகள் 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் ணைகளாகவும் காணப்படும். பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை,  கிளைகளின் நுனியில் காணப்படும். முதிராத கனிகள் பசுமையானவை. முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காப்படும். சமவெளியில் அரிதாக இந்த மரங்கள் வளர்கின்றன.  மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். இதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற. அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல் நோய், ண் நோய்கள், கோழை, மூலம், இருமல் ஆகியன தீரும். காயங்களை ஆற்றுவதற்கும், தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

    பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும். அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.

எச்சரிக்கை

è சீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன்-பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோர் கடுக்காயை உட்கொள்வதை தவிர்த்துவிடவும். உள்ளுக்கு சாப்பிடும் மருத்துவத்தில் பயன்படுத்துவோர் கடுக்காயின் உள்ளிருக்கும் விதையை நீக்கிய பின்னரே மருந்தில் சேர்க்க வேண்டும்.

கடுக்காய் தூள் அல்லது கடுக்காய் சூரணம்: கடுக்காயைக் கொட்டை நீக்கி,  மேல் தோலைச் சேகரித்து, காய வைத்து, தூள் செய்து, பருத்தி துணியில் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


வயிற்றுப் போக்கு தீர

Ø  கடுக்காய் தூள் ½ தேக்கரண்டி அளவு, தினமும் இரு வேளைகள், மோரில் சாப்பிட வேண்டும்.


செரியாமை மற்றும் மலச்சிக்கல் தீர

Ø  கடுக்காய் தூள் ½ தேக்கரண்டி அளவு இரவில், 7 நாட்களுக்கு, வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும்.

Ø  கடுக்காய் தோல் குடிநீர் கருப்பைப் புண் உள்பட பல வகைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது.


ஈறுவலி, பல்வலி, ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாக

Ø  கடுக்காய் தூள், சம அளவு உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி வர வேண்டும்.


ஈரல் விருத்தியடைய

Ø  கடுக்காயத் தூள், இரவில், ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். 21 நாட்கள் வரை இவ்வாறு செய்யலாம்.


திரிபலா சூம்: விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய்தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காய வைத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும். புளியேப்பம், செரியாமை, அஜீரம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்திப் பாருங்களேன். இதை ஒரு மந்திர மருந்தாக உணர்வீர்கள்.

கடுகு - Kadugu மருத்துவப் பயன்கள்





கடுகு



வளரியல்பு: சிறுசெடி


தாவர விளக்கம்: ஓராண்டு உயிர் வாழும் தாவரம். 1மீ. வரை உயரமானவை. பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, மஞ்சள் நிறமானவை. விதைகள் கடுகு எனப்படுபவை. வெள்ளைக் கடுகு மற்றும் சமையலில் பயன்படுத்தும் கடுகு என இரண்டு வகைகள் உண்டு. கடுகில் இருந்து பெறப்படுவது கடுகு ண்ணெய் ஆகும். விதைகள் பெருமளவில், உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்கு பயிர் செய்யப்படுகின்றன. தமிழகத்தில், பெரும்பாலும் துணைப் பயிராகவும், தரிசு நிலங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் கூட வளர்கின்றன. சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு ண்ணெய் மற்றும் வெள்ளைக்கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குன்மம், வாதநோய் ஆகியவைகளைக் குணமாக்கும்; ஜீரண உறுப்புக்களைப் பலப்படுத்தும்; வாந்தியுண்டாக்கும்; சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும். பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும். மருத்துவக் குணத்தால் கடுகை, ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். கடுகு ண்ணெய் நெடியும் விறுவிறுப்பும் கொண்டதாகும். தோல் நோய்களைக் குணமாக்கும்.

குறிப்பு: இந்தப் பகுதியில் கடுகு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் கடுகுச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.


கட்டிகள் உடைய

Ø  தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச வேண்டும்.

Ø கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல்பூச்சாகப் பூசி வர வேண்டும்.


குடிபோதை மாற

Ø  ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும்; குடிபோதை மாறும்.


வெள்ளைக்கடுகு  விதைகள் – Brassica alba

காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கும்; முடக்குவாத நோயைக் கட்டுப்படுத்தும்; பூச்சிக்கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு இதனை நீரில் ஊற வைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும். கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, இரத்தக்கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும். ¼ தேக்கரண்டி அளவு வெள்ளைக்கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.


கசகசா - Kasakasa மருத்துவப் பயன்கள்




கசகசா



வளரியல்பு: செடிகள்


தாவர விளக்கம்: மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். காய் போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில் அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே, இது உணவிலும் மருத்துவத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்டை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும்; உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்து வர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும்.


குழந்தைகளுக்கான சீதபேதி கட்டுப்பட

Ø  2 தேக்கரண்டி அளவு கசகசாவை, ¼ டம்ளர் பாலில் ஊற வைத்து, பசைப் போல அரைத்து, உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.


வாய்ப்புண் குணமாக

Ø  கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, ½ கோப்பை அளவுடன், ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, துவையலாக்கி, சாப்பிட வேண்டும்.


கீல்வாயு குணமாக

Ø  போஸ்தக்காய் 1, துத்தி இலை ஒரு கைப்பிடியளவு, இவற்றை நன்றாக  நசுக்கிக் கொண்டு, 1 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, சுண்டக் காய்ச்சி, வடிகட்டிக் கொண்டு, சூடு பொறுக்கும் அளவில், பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடமிட வேண்டும்.


உடல் பலம் பெற

கசகசா லேகியம்: கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு ஆகியவற்றைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்கு தூளாக்கி பசும்பால், தேன், நெய் தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக செய்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும்.

Please Contact for Appointment