கேள்வி: நான் தோல் கரப்பான் நோயால் அவதிப்படுகிறேன். ஆங்கில மருந்துகள் பல உபயோகித்துவிட்டேன் பலனில்லை. கரப்பான் நோய் வர காரணம் என்ன? கரப்பான் நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?
மருத்துவர் பதில்: கரப்பான் எனப்படும் எக்ஸிமா என்பது இரு வகைகளில் ஏற்படும் தோல் பாதிப்பாகும். சாதாரணமாக வியர்க்குரு போல இது ஆரம்பிக்கும். பின்னர் அந்த இடத்தை சுற்றிலும் கருப்பாக தோல் நிறம் மாறும். சிறிது அரிப்பு ஏற்படும். பின்னர் கரப்பான் பகுதியிலிருந்து நீர் வரும். அந்த நீர் மற்ற எந்த இடத்தில் படுகிறதோ அங்கெல்லாம் கரப்பான் வரும். பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் இந்த பாதிப்பானது வரும்.
உலர் கரப்பான் நோயில் நீர் கசியாது. நீர் கரப்பான் நோயில் ஈரத்தன்மை இருந்துகொண்டே இருக்கும்.
பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கரப்பான் அரிப்பு அதிகமாகலாம்.
பொதுவாக கரப்பான் போன்ற தோல் நோய் உள்ளவர்கள் கத்திரிக்காய், மீன், கருவாடு, நல்லெண்ணெய், மது வகைகள், தக்காளி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
இந்த வகையான உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கி தோல் தொல்லைகளை அதிகப்படுத்தக்கூடும்.
இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிறந்த உள், வெளி மருந்துகள் உள்ளன. எனவே தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக் 24* 7 ஹெல்த் லைன்
--==--