கேள்வி: எனது குழந்தை பிறந்த நான்கு மாதத்திலிருந்து எக்சிமா நோயால் அவதிப்படுகிறாள். இப்போது அவளுக்கு வயது 12, பலவிதமான ஆயின்மெண்ட் மாத்திரைகள் பயன்படுத்தியும் பலனில்லை, அனைத்து மருந்துமே உபயோகிக்கும் பொழுது நோயின் அறிகுறியை குறைக்கிறது, நிறுத்திவுடன் எக்சிமா மீண்டும் வந்து விடுகிறது. ஆரம்பத்தில் கை, கால்களில் இருந்தது. கடந்த 6 மாதத்தில் உடல்முழுவதும் பரவிவிட்டது. இரவு முழுவதும் அரிப்பு மற்றும் வலியால் கஷ்டப்படுகிறாள். எக்ஸிமா என்றால் என்ன? இதற்கு என்ன தீர்வு? ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகள்
உண்டா?
பதில்: தோல்வியாதிகள் பலவிதம். அவை எல்லாவற்றையும் பூரணமாக குணப்படுத்த நவீனமுறை மருத்துவத்தில் முடிவதில்லை. எக்ஸிமா அத்தகைய தோல்நோய்களில் ஒன்று. எக்ஸிமா- டெர்மடைடீஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிறந்த குழந்தைகளிலிருந்து, முதியோர்கள்வரை எல்லா வயதினரையும் தாக்கும் நோய். சிலருக்கு வயதாக வயதாக எக்சிமா குறையும். சிலருக்கு அதிகமாகும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தோன்றி, மறைந்து தொல்லைதரும்.
எக்சிமாஎன்றால்என்ன?
மேல்தோலில் உண்டாகும் அழற்சி. இதனால் அதிகமான அரிப்பு, நமைச்சல், கொப்புளங்கள், தோல் சிவப்படைவது, வீக்கம், சொரியும் சிரங்கும் ஏற்படுதல், செதில்கள் தோன்றுதல் மற்றும் சீழ்போல் புண்களிலிருந்து கசிவு ஏற்படுதல் – இவையெல்லாம் உண்டாகும். சினைப்பு உண்டாகும்.
சிலருக்கு இந்த வியாதி உடலின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பாதிக்கும். சிலருக்கு எங்கு வேண்டுமானாலும் உண்டாகலாம்.
எக்சிமாவை, ஏதோ ஒரு ஒவ்வாத பொருள் ஏற்படுத்தும் விளைவுக்களுக்கு எதிரான எச்சரிக்கை என்று சொல்லாம்.
தோல்வியாதிகளில் அதிகம் காணப்படுவது எக்ஸிமா ஆகும். உணவு கட்டுப்பாடு & மருந்துகள் மூலம், நோயின் தன்மையை குறைப்பதோடு, நோய்குணப்படும் வேகத்தையும் அதிகரிக்கமுடியும்.
முதலில் உங்கள் குழந்தையின் உணவில் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்க்கவேண்டும். முக்கியமாக பால் பொருட்கள், கோதுமை உணவுகள், நொதித்த உணவுகள் (ஈஸ்ட்) ஆகியவற்றை நிறுத்த வேண்டும். இவற்றிற்கு பதிலாக சோயாபால், போன்றவற்றை பயன்படுத்தலாம். உணவில் நிறைய காய்கறிவகைகள், பழவகைகள், சேர்த்துக்கொள்ளவேண்டும். இவைதோலின் உட்பகுதியை ஈரப்படுத்த உதவுகின்றன.
உங்கள் குழந்தை ஏதாவது ஒவ்வாமைக்காரணிகளால் துன்பப்படுவதாக இருந்தால், எந்தக்காரணிகள் இந்த ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டுபிடிக்க உணவு ஒவ்வாமை பரிசோதனை (Food Intolerance Test) செய்துகொள்ளலாம். எளிதாக செய்து கொள்ளக்கூடிய இப்பரிசோதனை மூலம் குழந்தைக்கு ஒவ்வாத உணவுக்காரணியை கண்டுபிடித்து அதை உணவிலிருந்து தவிர்த்துவிடலாம்.
ஹோமியோபதி மருந்துகள் உடலில் மாற்றத்ததை ஏற்படுத்த சிறிதுகாலம் தேவைப்படுகிறது. ஹோமியோபதி மருந்துகள் உபயோகித்து 3 – 6 மாதகாலத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக் 24* 7 ஹெல்த் லைன்
==--==