Friday, November 29, 2013

முதுகு வலி பற்றி மருத்துவர் செந்தில் குமார் அவர்களுடன் ஓர் நேர்காணல்








முதுகு வலி பற்றி மருத்துவர் செந்தில் குமார் அவர்களுடன் ஓர் நேர்காணல்

கேள்வி:- யாருக்கெல்லாம் முதுகு வலி வரலாம் டாக்டர்?
பதில்:- ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், குனிந்து குனிந்து வேலை செய்யும் பெண்களுக்கும் கார் ஓட்டுபவர்களுக்கும் முதுகுவலி வரலாம். அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதுகு தண்டில் மயக்க ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கும் வரலாம்.

கேள்வி:- முதுகில் எந்த பகுதியில் அதிகமாக வலி வரும் டாக்டர்?
பதில்:- முதுகின் நடுப்பகுதியிலும்அடி முதுகிலும்இடுப்பு குதியிலும்தான் பெரும்பாலும் முதுகுவலி அதிகமாக வருகிறது.

கேள்வி:- முதுகு வலி வராமல் தடுப்பது எப்படி டாக்டர்?
பதில்:- வருமுன் காப்போம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நீங்கள் அமரும் நாற்காலி உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு துவாலையை மடித்துப் போட்டு அதன் மீது உட்காருங்கள். துண்டும் வெப்பமடைந்தால் அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமரலாம்.

சத்துணவு, உடற்பயிற்சி ஓய்வு இந்த மூன்றையும் சரியாக பின்பற்றினால் முதுகுவலியிலிருந்து தப்பிக்கலாம்.

முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சிறிய ஸ்டூலின் மீது வைத்துக் கொண்டால், முதுகுவலி வருவதைத் தவிர்க்கலாம்.

உடல் குண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்கவேண்டும்.

ஒரே இடத்தில் பல மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருந்தால், தசைப்பிடிப்பு ஏற்படலாம். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை தளர்வாக நான்குபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுக்க வேண்டும்

தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் சிறிய வகை தளர்வு பயிற்சிகளான குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யலாம். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைகள் தளரும்.

வாக்கிங், நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.

முதுகு வலியைக் குறைக்க பல வகையான யோகாசனங்கள் உள்ளன. வயதுக்கு ஏற்ற யோகாசனங்களைப் பின் பற்றி தொடர்ந்து செய்தால் முதுகுவலி குறையும். இவற்றை முறையாக பயிற்சி பெற்றவரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்.

கேள்வி:- இதற்கான சிகிச்சை என்ன டாக்டர்?
பதில்:- வலிநிவாரணிகள்  அவசரகாலத்திற்கு உதவினாலும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. பிஸியோதெராபி பலனலிக்கும்.

கேள்வி:- ஹோமியோபதி மருத்துவத்தில் முதுகு வலிக்கு மருந்துகள் உண்டா டாக்டர்?
பதில்:- ஹோமியோபதி மருத்துவத்தில் முதுகுவலி பிரச்சினைக்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தும் மருந்துகள் மற்றும் நோயின் அறிகுறிகளுக்கேற்ற மருந்துகள் பரிந்துரைப்பார்கள். அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் முதுகுவலி பிரச்சினைக்கு ஹோமியோபதி மருத்துவம் மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.

கேள்வி:- முதுகுவலி பிரச்சினைக்கு சிகிச்சையில் உங்களின் மருத்துவ அனுபவங்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.
பதில்:- எனது பதினான்கு வருட மருத்துவ அனுபவத்தில் நாள்பட்ட முதுகுவலி பிரச்சினை மற்றும் ஆரம்பநிலை முதுகுவலி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பெண்கள் என பல நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்துள்ளேன். நோயின் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகளை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கும்போது நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கேள்வி:- உங்களை எங்கே சந்திக்கலாம் டாக்டர்?
பதில்:- எங்களுடைய விவேகானந்தா கிளினிக் சென்னையிலும், பாண்டிச்சேரி மற்றும் பண்ருட்டியிலும் இருக்கிறது. 9786901830 என்ற கைபேசி எண்னை தொடர்புகொண்டு முன்பதிவு பெற்று என்னை சந்திக்கலாம்.




மேலும் விபரங்களுக்கும் சிகிச்சைக்கும் தயக்கமின்றி தொடர்பு கொள்ளவும்,

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்







==--==


Please Contact for Appointment