Friday, November 29, 2013

மது - குடிப்பழக்கம் மறப்போம் மறுவாழ்வு வாழ்வோம்.
மது -  குடிப்பழக்கம் மறப்போம் மறுவாழ்வு  வாழ்வோம்.
Ø  மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது உணவு பொருட்களை கெட்டுபோகவைப்பதால் உண்டாவதாகும்.
Ø  கோதுமை, சோளம், ஒட்ஸ், பார்லி அரிசி, திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.
Ø  நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயற்கையாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.
Ø  மது அருந்துபவர்களை எந்நோய்க்கும் எளிதில் தாக்கும்.
Ø  மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.
Ø  நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து வருபவர் தனக்கு மதுவால் அதிக பாதிப்பு இல்லை, பாதிப்பும் வராது என்று எண்ணி கொள்வார். ஆனால் அவர்களது ஈரல், மூளை. நரம்புகள், சிறுநீரகங்கள், பாலின உறுப்புகள், நுரையீரல்கள், இரைப்பை, இரத்தக் குழாய்கள் ஆகிய உறுப்புகளெல்லாம் சிறிது சிறிதாகக் கெட்டுவிடும்.
Ø  மது அதிகம் அருந்தினால் உடல் நரம்புகளும் பாதிப்படையும். பார்வை நரம்புகள் பாதிக்கப்படும் கைகால் நரம்புகள் தளரும். குடலின் புண் ஏற்பட்டு இரைப்பை அழற்சி நேரும். குடல் கல்லீரல் செல்கள் சேதப்படும். உடலின் ஒவ்வோர் உறுப்பிலும் பாதிப்பு  அதிகமாகும்.
Ø  பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் மதுப்பழக்கம் பின் எந்நேரமும் மதுவைப் பற்றி நினைவுடனேயே இருக்க வைத்துவிடும். குடிக்கும் அளவு எல்லை மீறிப்போகும்.
Ø  குடிக்கு அடிமையான பின் நரம்புத் தளர்ச்சியால் கை கால்கள் நடுங்கும். நடுங்கும் அறிகுறிகளைத் தவிர்க்க மேலும் குடிப்பார்கள்.
Ø  மதுவை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு குடிக்க ஆரம்பிப்பார்கள். சுயக்கட்டுப்பாடு மீறிப் போய்விட்டால் குடிப்பதற்காகப் பலவித காரணங்களைக் கூறுவார்கள். அந்த காரணங்களை நியாயப்படுத்துவார்கள. சொல்லியும் கேட்காமல் குடித்ததற்கு மன்னிப்புகளை அள்ளி விடுவார்கள்.
Ø  குழந்தை இல்லையென்ற கவலையை மறக்கச் சில ஆண்கள் மது அருந்துவதும் நட்புக்காகக் குடிப்பதற்கும் அடிமையாவதற்கும் இடையேயான நூலிழை போன்ற அளவுக்கோட்டை எப்போது நாம் தாண்டினோம் என்பதைப் பல குடிகாரர்கள் அறிய நினைத்தும் குடியை நிருத்த முடிவதில்லை. தங்கள் வாழ்க்கையை மெல்ல மெல்ல அது அழித்துக் கொண்டு வருகிறது. என்று அவர்கள் உணர்ந்த நிலையிலும்கூட அப்பழக்கத்தை அவர்களால் கைவிட முடியாது.
Ø  மது அருந்துவது உடல் நலத்தை மட்டுமின்றி மன நலத்தையும் அதிக அளவில் பாதிக்கும்.
Ø  அளவுக்கு மீறி மது குடிப்பது. மது குடிப்பது பற்றியே நெடுநேரம் சிந்தித்துக் கொண்டிருப்பது. குடிக்காமல் நிறுத்திய உடனே உடலளவிலும் மனத்தளவிலும் பதற்றம். நடுக்கம் ஏற்படுவது போன்றவை ஒருவன் மதுப் பழக்கத்திலிருந்து குடி நோயாளியாகவே மாறிவிட்டதை உணர்த்தும்.
Ø  மெல்ல மெல்லக் காரணமற்ற பயம் தன்னைப் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் அவநம்பிக்கையான எண்ணங்கள், வெறித்தனம், தாம்பத்ய உறவில் பிரச்னைகள், மூளையின் செயல்திறன் மங்கிப்போதல், முக்கியமாக நினைவாற்றல் இழக்கும் நிலை மது குடிக்கவில்லை என்றால் ஒருவித மனப்பிம்ரமை, அதிர்ச்சி, நடுக்கம், எரிச்சல் போன்ற மனநலக் குறைபாடுகள் தோன்றும்.
Ø  இவ்விதம் குடிகாரனின் போதை உணர்வு அதிகமாகிக் கொண்டே போய் ஒரு குடி  வெறியாய் மாறிவிடும்.

உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.

மனம் கட்டுப்பாடாக இருந்தால் சூழ்நிலை படு மோசமானதாக இருந்தாலும் மனக் கட்டுப்பாடு கொண்டவர்களை யாராலும் குடிகாரனாக்க முடியாது. குடிகாரர்கள் மத்தியிலும் கூட ஒழுக்கத்தில் உயர்தவராகளாகவே வாழலாம்.

குடியை மறந்தால் நிம்மதியாக வாழலாம்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்==--==

Please Contact for Appointment